பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

291


வணங்கப்படுகின்ற சண்டேச்சுரர் பிறந்த ஊர் இந்த ஊரே யாகும். அவ்வூரைப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். திருச்சேய் நல்லூர் என்னும் பெயர் இப்பொழுது திருச்செங்கனுர் என மருவி வழங்குகின்றது.

வட ஆர்க்காட்டிலுள்ள சேனூரும் முருகனோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றது. முன்னாளில் அவ்வூர் சேய் நல்லூர் என வழங்கிற்று.11 அப் பெயரே சேனூர் என்று மருவியுள்ளது.

திருச்செந்தில்

தமிழகத்தில் முருகவேள் காட்சி தரும் பழம்பதிகளை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைத்தார்.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன்”

என்பது அவர் பாட்டு. தென்பாண்டி நாட்டில் கடற் கரைக் கோவிலாக விளங்குவது செந்திலம்பதி. நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நிலவும் செந்தில் மாநகர்க் கந்தன் கோவில் திருச்சீர் அலைவாய் என்று நக்கீர தேவரால் திருமுருகாற்றுப் படையிலே பாடப் பெற்றுள்ளது. இளங்கோவடிகள் புகழ்ந்தவாறே நக்கீரரும் செந்திற் பதியில் வீற்றிருக்கும் அலைவாய்க் கோயிலை,

“உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்”

என நிறைந்த மொழிகளால் போற்றினார். கடல் சூழ்ந்த வீர மகேந்திரத்தில் அரசு புரிந்த சூரன் என்னும் அசுரனை வென்று, அறத்தை நிலை நிறுத்தக் கருதிய முருகவேள் செந்திற் பதியைப் படை வீடாகக் கொண்டார் என்று கந்த