பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

ஊரும் பேரும்


“நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்
வாழ்வு இல்லந்தொறும் மூன்றெரி யுடைத்து”

என்று ஒளவையார் சித்தன் வாழ்வைச் சிறப்பித்துப் பாடினார்.

திருவிடைக்கழி

சோழ நாட்டில் முருகப் பெருமான் தண்ணருள் புரியும் தலங்களுள் ஒன்று திருவிடைக் கழியாகும். அத்தலத்தின் பெயர் விடைக்கழி எனவும் இடைக் கழி திருவிடைக்கழி எனவும் வழங்கும்.15 அங்கு நறுமணம் கமழும் மகிழஞ் சோலையில் குரவமரத் தடியில் அமர்ந்துள்ள குமாரக் கடவுளை,

“குலவிடைக் கழியின் மகிழ்வனத்தில் ஒரு
குரவடிக்கணமர் நீபமாலைப்புய வேளைப் புரக்கவே”

என்று போற்றினார் திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழுடையார். இவ்வூர் தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.

சாத்தனும் பலதேவனும்

சாத்தான்

சாத்தான் பெயரால் அமைந்த ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவுண்டு. அவ்வூர்களிற் பெரும்பாலும் சாத்தன் இன்றும் சாத்தன் வழிபாடு சிறப்பாக நடைபெறக் காணலாம். சாத்தனாரை ஐயனார் என்றும் அழைப்பதுண்டு. சோழ நாட்டில் திருவாவடுதுறைக்கு அருகில் ஒரு சாத்தனூர் உள்ளது. திரு விசைப்பாவிலும், திருத் தொண்டர் புராணத்திலும் அவ்வூர் குறிக்கப்படுகின்றது. அங்கே சிறப்பு வாய்ந்த ஐயனார் கோவில் ஒன்று விளங்குகின்றது. எனவே, ஐயனார் பெயரே ஊர்ப் பெயராக வழங்கலாயிற் றென்பது வெளிப்படை.