பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

295


பலதேவர்

பழந் தமிழ் நாட்டில் பலதேவன் வழிபாடு நிகழ்ந்த தென்பது இலக்கியங்களால் அறியப்படும். வெண்ணிறம் வாய்ந்த அத்தேவனை, “வால்வளை மேனி வாலியோன்” என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. அவரை வெள்ளை மூர்த்தி என்றும், பல தேவன் என்றும் பண்டைத் தமிழர் அழைப்பாராயினர்.16 காவிரிப் பூம்பட்டினத்திலும், மதுரையம் பதியிலும் அவர்க்குக் கோயில் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரையில் இருந்த பலதேவர் கோயிலை “வெள்ளை நகரம்” என்று சிலப்பதிகாரம் குறிக்கும்.17 உத்தரமேரூர் என்னும் ஊரில் வெள்ளை மூர்த்தி கோயில் ஒன்று இருந்த தென்பது சாசனத்தால் விளங்குகின்றது.18 தாமிரபரணி யாற்றின் கரையில் வெள்ளைக் கோயில் துறை ஒன்றுண்டு. பழைய பலதேவர் வழிபாட்டை அது நினைவூட்டுவதாகும்.

அடிக் குறிப்பு

1. “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்”
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்-”

-மங்கல வாழ்த்துப் பாடல்.

2. நியமம், கோயில் என்பது “உவணச் சேவல் உயர்த்தோன் நியமனம்” என்று திருமால் கோயில் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுதலாலும் உணரப்படும்-ஊர்காண் காதை, 8.

3. பரிதி நியமம், சூரியன் ஈசனை வழிபட்ட ஸ்தலம் என்று கொள்ளலு மாகும்.

4. சூரியனார் கோயிலைப் பற்றிய சாசனங்களும், அங்குள்ள நவக்கிரகங்களின் அமைப்பும், அவற்றின் படங்களும்