பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

ஊரும் பேரும்


யும் வருணன் வாராமையால் அவன் மீது சீற்றமுற்ற இராமன், தன் வில்லை வளைத்துச் சுடுசரம் துரந்த இடம் தனுக்கோடி என்று பெயர் பெற்ற தென்பர்.

இராமன் நிகழ்த்திய பெரும்போரில் பங்குகொண்ட வானரத் தலைவரின் பெயர்கள் சில ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. அனுமந்தக்குடி என்னும் ஊர் அனுமன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. காவிரிக் கரையில் அமைந்த குரங்காடு துறைகளில் வாலியும் சுக்கிரீவனும் ஈசனை வணங்கினர் என்று சொல்லப்படுகின்றது. வாலி கண்டபுரம், வாலி நோக்கம் முதலிய ஊர்ப் பெயர்களில் வானர மன்னனாகிய வாலி குறிக்கப்படுகின்றான்.

புள்ளிருக்கு வேளுர் என்ற ஊரில் இராமனுக்கு உதவி செய்த சடாயு, இறைவனை வழிபட்டான் என்று தேவாரம் பகர்கின்றது. நெல்லை நாட்டிலுள்ள மாயமான் குறிச்சியும், சேலம் நாட்டிலுள்ள மாயமான் கரடு என்னும் ஊரும் மாரீசனோடு தொடர்புற்று விளங்குகின்றன.

திரிசிரபுரம்

இனி, திருச்சிராப்பள்ளியில் திரிசிரன் புகுந்த முறையும் அறியத்தக்க தாகும். சோழ நாட்டின் பண்டைத் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே நின்ற மலை,சிராப்பள்ளிக் குன்றம் என்று தேவாரத்தில் குறிக்கப் பெற்றது.4 பாடல் பெற்றமையால் சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி யாயிற்று.அப்பதியில் இராவணன் தம்பியாகிய திரிசிரன் வழிபாடு செய்தான் என்ற கதை பிற்காலத்தில் பிறந்தது. அதற்