பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

ஊரும் பேரும்


மந்தாரம்

மாயவரத்துக்கு அருகேயுள்ள ஆற்றுார் என்னும் பழம் பதியில் மந்தார வனத்தில் இறைவன் வெளிப்பட்டானாதலின், அதற்கு மந்தாரம் என்ற பெயரும் மந்தாரம் வழங்கலாயிற்று. 'வக்கரை மந்தாரம் வாரணாசி' என்ற திருத்தாண்டகத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளது.

“ஓங்கு மந்தார வனத்து மேவும்
உத்தமனே இஃதொன்று கேள்நீ”

என வரும் ஆற்றுர்ப் புராணத்தால் மந்தாரம் ஈசன் திருக் கோயில் கொண்ட இடம் என்பது இனிது விளங்கும்.7

மாறன்பாடி

மூவர் தேவாரமும் பெற்ற திருநெல்வாயில் அரத்துறையில் அருகே அமைந்த வைப்புத் தலம் திருமாறன் பாடியாகும். திருஞான சம்பந்தர் வரலாற்றில் சிறந்த தொரு நிகழ்ச்சியைக் காணும் பேறு பெற்றது அப்பாடி விருத்தாசலம் என்னும் முதுகுன்றத்தையும், திருப்பெண்ணாகடத்தையும் வணங்கிய திருஞான சம்பந்தர் அடி வருந்த வழி நடந்து அரத்துறையை நோக்கிச் சென்றார். மாறன் பாடியை அடைந்தபோது அந்தி மாலை வந்துற்றது. அடியார்களோடு அன்றிரவு அங்குத் தங்கினார் சம்பந்தர்.8

திருஞான சம்பந்தரது வருகையை அறிந்த திரு அரத்துறை வேதியர்கள் ஈசனளித்த முத்துச் சிவிகையும், மணிக்குடையும் மற்றைய சின்னங்களும் கொண்டு,திருமாறன் பாடிக்குச் சென்று அவரை ஆர்வத்துடன்