பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

319


அழைத்து வந்தார்கள். அந்நிலையில் இறைவனது பெருங்கருணையை நினைந்து மனமுருகிப் பாடினார் சம்பந்தர்.

“எந்தை ஈசன் எம்பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
சென்று கைகூடுவ தன்றால்”

என்னும் திருப்பாசுரம் அப்பொழுது எழுந்ததாகும்.

இங்ஙனம் திருத்தொண்டர் புராணத்தில் சிறப்பிக்கப் படுகின்ற மாறன்பாடி, சாசனத்திலும் குறிக்கப்படுகின்றது. திருவடத்துறை என வழங்கும் திருவரத்துறைக் கோயிற் சாசனத்திற் சேக்கிழார் பாலறாவாயன் என்னும் களப்பாள ராயன் அளித்த நன்கொடை என்று குறிக்கப்படுகின்றது. திருவரத் துறைப் பெருமான் மாறன் பாடிக்கு எழுந்தருளு கின்ற மாசித் திரு நாளிலும்,வைகாசி விழாவிலும் திருவமுது வழங்குவதற்காக விட்ட நிவந்தம் அச்சாசனத் தால் விளங்குவதாகும். இதனால் மாறன் பாடிக்கும் அரத் துறைக்கும் அந் நாளில் இருந்த தொடர்பு நன்கு அறியப் படும்.

கஞ்சாறு

ஈசன் காட்சி தரும் தலங்களுள் கஞ்சாறு என்ற ஊரும் ஒன்று.

“கஞ்சனுர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே”

என்று திருநாவுக்கரசர் திருவாக்கு எழுந்தது. இவ்வூரிலே பிறந்து சிவனடியாராகச் சிறந்தவர் மானக் கஞ்சாறனார் என்று பெயர் பெற்றார். சோலையும் வயலும் சூழ்ந்த இப்பழம் பதியின் செழுமையை,