பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

ஊரும் பேரும்


“கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின் கமழ்சாறுர் கஞ்சாறுர்”

என்று அழகுற எழுதிக் காட்டினார் சேக்கிழார். தஞ்சை நாட்டைச் சேர்ந்த மாயவர வட்டத்தில் ஆனந்த தாண்டவபுரத்திற்கு அண்மையில் உள்ள கஞ்சா நகரமே இத்தலம் என்பர்.10

கருந்திட்டைக்குடி

தஞ்சை நகரத்தைச் சேர்ந்த சிற்றூர்களில் ஒன்று கருந்திட்டைக்குடி, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அவ்வூர் சுங்கந் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் பெயர் பெற்றது.அது வைப்புத் தலங் களில் ஒன்றென்பது,“கற்குடி,தென்களக்குடி, செங்காட்டங்குடி,கருந்திட்டைக்குடி,கடையக்குடி” என்ற திருநாவுக்கரசர் பாட்டால் விளங்கும். அவ்வூர்ப் பெயர் இப்பொழுது கரந்தட்டாங்குடி என மருவி வழங்கும்.

தக்களூர்

'தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்' என்று திருநாவுக்கரசரால் குறிக்கப்பெற்ற தக்களூர் இப்பொழுது காரைக்கால் நாட்டில் திருநள்ளாறு என்னும் பாடல் தக்களுர் பெற்ற பதிக்கு அருகேயுள்ளது. திருநள்ளாற்று நாதனை வழிபட்ட திருஞான சம்பந்தர் அதனருகே அமைந்த பல பதிகளையும் வணங்கிச் சாத்தமங்கை சார்ந்தார் என்று சேக்கிழார் கூறுதலால்,தக்களூரும் அவரால் வழிபடப்பட்டதென்று கொள்ளத் தகும்.

துடையூர்

திருநாவுக்கரசர் அருளிய தலக்கோவையில் துடையூர் என்பது ஒரு தலம். “துறையூரும் துடையூரும் தொழ, இடர்கள் தொடரா வன்றே” என்னும் திருப்பாசுரப் பகுதியில்