பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

ஊரும் பேரும்


சூழ்ந்த மருத நிலத்தில் அமைந்திருந்த தென்பது சுந்தரர் திருப்பாட்டால் விளங்குகின்றது. அங்குச் சுந்தரர் உணவுப் பொருளாகிய நெல்லை இறைவனிடம் வேண்டிப் பெற்றார்; அதனைத் தம் வீட்டிற் சேர்ப்பதற்கு வேலையாட்கள் இல்லாமையால் திருக்கோளிலிப் பெருமானிடம் போந்து தம் குறையை முறையிட்டார்;

“கோளிலி எம்பெருமான்
குண்டை யூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான்
அவை அட்டித்தரப் பணியே”

என்று பாடினார். இவ்வாறு சுந்தரர் தேவாரத்தில் வைப்புத் தலமாகக் குறிப்பிட்டுள்ள குண்டையூர், இக்காலத்தில் தஞ்சை நாட்டில் நாகப்பட்டின வட்டத்தில் குன்னியூர் என்னும் பெயரோடு விளங்குகின்றது. -

சடைமுடி

திருநாவுக்கரசர், “சடைமுடி சாலைக்குடி தக்களுர்” என்று குறித்தருளிய பாசுரத்திலுள்ள சடைமுடி என்ற ஊர் இப்பொழுது கோவிலடி என வழங்குகின்றது. திருச்சடை முடியுடைய மாதேவர் கோயில், பழைய திருப்பேர் நகரத்தின் ஒருசார் அமைந்திருந்ததென்பதும், அக்கோயில், திருப்புறம் என்று பெயர் பெற்று இருந்த தென்பதும் சாசனங்களாற் புலனாகும்.21 திருப்பேர் நகரம் ஆழ்வார்களாற் பாடப்பெற்ற பெருமாள் கோயிலையும் உடையது. சடை முடியார் கோயில் திருமால் கோயிலுக்குக் கிழக்கே அரை மைல் தூரத்தில் உள்ளது.

சிவாலயமாகிய திருப்புறத்தையுடைய நகர்ப் பகுதி திருப்பேர்ப்புறம் என வழங்கிற்று. பண்டைத் தமிழ் மன்னர்