பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

329


எனவே, திருக்காரிக்கரை தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றென்பது தெளிவாகும்.

அத்தலம் தொண்டை நாட்டுக் குன்றவர்த்தனக் கோட்டத்தில் உள்ளதென்று கல்வெட்டுக் கூறுகின்றது. “குன்ற வர்த்தனக் கோட்டத்து நடுவில் மலையிலுள்ள திருக் காரிக்கரை யுடையார்” என்பது சாசனத் தொடர்.26 எனவே, காரிக்கரை என்பது திருக்கோயிலின் பெயராகத் தெரிகின்றது. இராஜராஜன் முதலாய பெருஞ்சோழ மன்னர்கள் அக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் கல்வெட்டிற் காணப்படும்.இந்நாளில் செங்கற்பட்டு நாட்டில் பொன்னேரி வட்டத்தில் ராமகிரி என்னும் பெயரால் அத்தலம் விளங்கு கின்றது.

திரிப்புராந்தகம்

தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் அமைந்த கூகம் என்னும் ஊர் மிகப் பழமை வாய்ந்தது. திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற திருவிற் , கோலமுடையார் அமர்ந்தருளும் பதி இப்பதியே. கோலத்தில் ஈசன் விளங்குமிடம் திருவிற் கோலம் என்பர்.27 திருவிற்கோலமுடையாரது ஆலயம் திரிபுராந்தகம் என்று பெயர் பெற்றது. இன்றும், திரிபுராந்தகம் என்பதே அங்குள்ள இறைவன் திருநாமம். இவ்வூர் மதுராந்தக நல்லூர் என்றும், தியாக சமுத்திர நல்லூர் என்றும் சாசனங்களிற் பேசப்படுகின்றது.

அடிக் குறிப்பு

1. 252 of 1909, 248 of 1909, அச் சிவாலயம் பிரமீஸ்வரம் என்று பெயர் பெற்றுள்ளது.

2. “உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுத் திருவாவடுதுறை யுடையார்” என்பது சாசனத் தொடர். பேராவூர்ச்