பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

349


“அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர், அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே" என்றும் அவற்றைத் திருமங்கை யாழ்வார் பாடியருளினார்.

மணிமாடக்கோயில் செம்பொன் செய்கோயில்

இன்னும், மணிமாடக் கோயில், செம்பொன் செய்கோயில் என்னும் இரண்டும் திருநாங்கூர்த் திருப்பதிகளாகும். மணிமாடக் கோயிலில் அமர்ந்த பெருமானை “நந்தாவிளக்கே நாநாரணனே” என்று ஆழ்வார் ஆதரித்து அழைத்து மங்களா சாசனம் செய்தமையால் அத்திரு நாமம் இரண்டும் அவர்க்கு அமைந்துள்ளன. செம்பொன் செய்கோயிலில் திருமாலின் நின்ற திருக்கோலம் விளங்குகின்றது. அதனைக் கண்களிப்பக் கண்ட ஆழ்வார், “செம்பொன் செய் கோயிலின் உள்ளே, உயர்மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந் தொழிந் தேனே என்று பாடித் தொழுதார்.7

மகேந்திர விண்ணகரம்

தமிழ்நாட்டை யாண்ட மன்னர் தம் பெயரால் அமைத்த விண்ணகரங்கள் பலவாகும். பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் மகேந்திர புர நகரத்தில் ஒரு குன்றத்தைக் குடைந்து எடுத்து அக் கோவிலுக்கு மகேந்திர விஷ்ணு கிரகம் என்று பெயரிட்டான்.8

பரமேச்சுர விண்ணகரம்

காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப் பெருமாள் கோவில் முன்னாளில் பரமேச்சுர விண்ணகரம் என்னும் பெயரால் விளங்கிற்று. திருமங்கை யாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்று அவ்விண்ணகரம்.பரமேச்சுரன்