பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

ஊரும் பேரும்


உணர்த்துகின்றது. அது முதற் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாகும்.17 திருச்சி நாட்டு உடையார் பாளையத் தில் உள்ள கீழப்பழுவூரில் வீரசோழ விண்ணகரம் விளங்கிற் றென்று சாசனம் கூறும்.18

திருப்பொதியில் விண்ணகரம்

கோவில்குளம் என்பது நெல்லை நாட்டு அம்பாசமுத்திர வட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயர். அவ்வூரில் தென்னழகர் என்னும் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். பழமையான பல வட்டெழுத்துச் சாசனங்கள் அக்கோயிலிற் காணப் படுகின்றன. திருப்பொதியில் என்னும் பெயர் முற் காலத்தில் அதற்கமைந்திருந்த தென்பது அக் கல்வெட்டுக்களால் அறியப்படும்.19 புகழ் வாய்ந்த பொதிய மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில், பொதியில் விண்ணகரம் என்று பெயர் பெற்றது மிகப் பொருத்தமாகத் தோன்று கின்றது.அக்கோயிலின் பெருமையாலேயே முன்பு குளம் என்னும் பெயருடையதாயிருந்த ஊர், கோவில் குள மாயிற்று.20

விண்ணபள்ளி

கோவை நாட்டுக் கோபி வட்டத்தில் உள்ள விண்ணபள்ளி யென்னும் ஊர் அங்குக் கோயில் கொண்டுள்ள பெருமாள் பெயராற் பெருமை யுற்றதாகும். ஆதி நாராயணப் பெருமாளின் கோவிலடியாக விண்ணபள்ளி என்ற பெயர் அதற்கு அமைந்தது.21

மாமணிக் கோயில்

திருமால் நீலமேனியன் என்றும், மணிவண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். தஞ்சையில் கோயில் கொண்ட திருமாலைத் தஞ்சை மாமணி என்று ஆழ்வார்கள்