பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

ஊரும் பேரும்


அம்மணங் குப்பம் என்பது ஓர் ஊர். இவ்வூர்கள் எல்லாம் சமண மணம் கமழ்ந்த இடங்களாக இருந்திருத்தல் வேண்டும்.

பேரமனூர்

தொண்டை மண்டலத்துச் செங்குன்ற நாட்டைச் சேர்ந்த பேரமனூர் என்னும் ஊர் சமண சம்பந்தமுடையதென்பது அதன் பெயரால் விளங்குவதாகும். இக்காலத்தில் பேரமனுர் என வழங்கும் அவ்வூர் செங்கற்பட்டு வட்டத்தில் உள்ளது.19

போதிமங்கை

முன்னாளில் புத்தர்கள் சிறந்து வாழ்ந்த ஊர்களில் ஒன்று போதி மங்கை. அது புதுவை நாட்டில் தெளிச்சேரி யென்னும் பாடல்பெற்ற பதியின் அருகே இருந்ததாகத் தெரிகின்றது. போதிமரம் புத்தர் போற்றும் புனிதமுடைய தாதலின் அதன் பெயரால் அமைந்த ஊர் போதிமங்கை எனப் பட்டது போலும் அங்குப் புத்தமத வேதமாகிய பிடக நூலையும், அளவை நூலையும் துறைபோகக் கற்றுப் பிற சமய வாதிகளை அறை கூவி வாது செய்ய அழைக்கும் அறிஞர் பலர் இருந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பர சமய கோளரியாக விளங்கிய திருஞான சம்பந்தர்,

“சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை”

யின் வழியே போந்தாரென்றும், அங்கும் புகைந்து எழுந்த புத்த நந்தி பொன்றி வீழ்ந்தான் என்றும், சாரிபுத்தன்