பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகமும் நிலமும்

41

2. தொல்காப்பியம், பொருள், அகம் .

3. “நளன் என்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்" நளவெண்பா.

4. பனம்பாரனார் இயற்றிய சிறப்புப் பாயிரம்.

5. “வட சொற்கும் தென் சொற்கும் வரம்பாகி......... உடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் - கம்பராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்.

6. “செம்மையைக் கருமை தன்னைத் திருமலையொருமை யானை” -திருமங்கையாழ்வார், திருக்குறுந்தாண்டகம்.

7. “வாழையும் கமுகும், தாழ்குலைத் தெங்கும், மாவும் பலாவும் சூழடுத்தோங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” - சிலப்பதிகாரம், காடுகாண் காதை.

8. M. M. Vol. III, p 718.

9. “சேயோன் மேய மைவரை உலகம்” என்னும் தொல்காப்பியத்தாலும், “குன்றுதோறாடலும் நின்றதன்பண்பே” என்னும் திரு முருகாற்றுப் படையாலும் இக்கொள்கை விளங்கும்.

10. “அறையே பாறை” - பிங்கல நிகண்டு.

11. திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே உள்ள தென்பது “கூடற்குடவயின்....அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று” என்னும் திருமுருகாற்றுப்படையால் தெரியலாகும்.

12. குன்றம் என்பது குன்னம் எனவும், குணம் எனவும் தமிழ்நாட்டில் மருவி வழங்கும். ஒன்று என்னும் சொல் ஒன்னு என்றும், ஒண்ணு என்றும் பேச்சுத் தமிழில் வழங்குதல் காண்க. குன்றம், குண்ணம் என்றாகிப் பின்பு குணம் எனக் குறுகிற்று. நெற் குன்றம் என்பது வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் உள்ளது. அது நெற்குன்றம் என வழங்குகின்றது. 86 of 1908, அவ்