பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊரும் பேரும்

44

29. தேவாரப் பாடல் பெற்ற காவுகள் பின்னர்க் கூறப்படும்.

30. S. I. I. Vol. iv. p. 326

31. 169 of 1914. 32. மதுரை நாட்டு மேலுர் வட்டத்திலுள்ள அழகர் கோயிலே திருமால் இருஞ்சோலை. M. E. R. 1928-29. தென் திருமால் இருஞ்சோலை என்பது திருநெல்வேலி நாட்டிலுள்ள சீவலப்பேரியின் பெயர் என்று சாசனம் கூறும். 408 of 1906.

33. “பழமுதிர்ச்சோலை மலைகிழவோனே” திருமுருகாற்றுப்படை.

34. தொகுப்பு என்பது தோப்பு என்றாயிற்று. “செய்குன்று சேர்ந்த சோலை தோப்பாகும்” - பிங்கல நிகண்டு.

35. 312 of 1901, 355 of 1908. திருவிடைச் சுரத்தைத் தொண்டை நாட்டுக் குறிஞ்சி நிலத் தலமாக குறித்துள்ளார் சேக்கிழார் -திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 13.

36. “ஊரொடு சேர்ந்த சோலை, வனம் என்ப” - பிங்கல நிகண்டு.

37. திந்திருணி என்பது புளிய மரத்தைக் குறிக்கும் வடசொல். திந்திருணி வனம் (புளியங்காடு) திண்டிவனம் என மருவிற் றென்பர். 143 of 1900.

38. மறைக்காடு என்பதற்கு நேரான வடசொல் வேதாரண்யம்.

39. கரைய புரம் என்பது இப்பொழுது வழங்கும் பெயர். கரவீரம், கரையபுரம் என மருவியுள்ளது. கரவீரம் அலரியென்பது, “கவீரம் கணவீரம் கரவீரம் அலரி என்னும் பிங்கல நிகண்டால் அறியப்படும் .

40. இவ்வூர் திருப்பங்கிலி என்ற பெயரோடு திருச்சி நாட்டு லால்குடி வட்டத்தில் உள்ளது.

41. திருநாம நல்லூர் பழைய திருநாவலுரே யென்பது சாசனத்தால் விளங்கும். 360 of 1902.