பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடும் நகரமும்

47

காலத்தில் வழங்கும். துங்கையும் பத்திரையும் சேர்ந்து துங்கபத்திரையென்று பெயர் பெறும் இடத்தில் அமைந்த ஊருக்குக் கூடலி என்று பெயர். Mysore, Vol. 1 p. 459.

66. இக்காலத்தில் சீவலப்பேரி யென்பது அதன் பெயர். முன்னாளில் இராமேச்சுரத்திற்குத் தீர்த்த யாத்திரை செய்வோர் சீவலப்பேரி யென்னும் முக் கூடலில் நீராடுவர். அவர்களுக்கு நாள்தோறும் உணவளித்தற் பொருட்டுத் தளவாய் முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட தர்மசாலை (சத்திரம்) இன்றும் அவ்வூரில் உள்ளது. T.G p. 485.

67. கடலருகே யமைந்த காரணத்தால் கடலூர் எனப்பட்டது என்று கொள்வர் சிலர். கூடலூர் என்னும் பெயரே கடலூர் என மருவி வழங்குவதால் அக்கொள்கை பொருத்தமுடையதன்று. South Arcot District Gaz., 296.

68. பத்தல்மடை என்ற பெயர் சாசனத்திற் காணப்படுகின்றது. M. E. R. 1916–17.

69. பல்லவ னேரி என்பது சிதைந்து பல்மனேர் என வழங்குகின்றது. சித்துர் நாட்டில் உள்ளது. அங்குக் குன்று சூழ்ந்த ஒரு தடாகம் உண்டு. North Arcot Manual. Vol. p. II 391.

70, 199 of 1901: 224 of 1922.

71. 569 of 1905 records that the king renamed a ruined tank (at Vagaiputtur) Virapandiyappereri and granted all lands irrigated by it to the Villagers-1. M. P. p. 542.

72. M. E. R. 1929-30,

73, 192 of 1919.

74. ஸ்ரீவல்லபனால் முன்னேற்றமடைந்த ஊராதலின் ஸ்ரீவல்லபமங்கலம் என்னும் பெயரும் அதற்குண்டு, 160 of 1895. அப்பெயர் சீவலனாடு எனவும், சீவல மங்கையெனவும் முக்கூடற் பள்ளு நாடகத்தில் வழங்கும் - முக்கூடற்பள்ளு, 5, 18.