பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஊரும் பேரும்

ஊரும் பேரும் கொநாடென மருவிற்று. பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன. தன்மையை இவ்வூர்ப் பெயர்கள் உணர்த்துவனவாகும்.

நகரம்

சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும். நாட்டின் தலைமை சான்ற நகரம் தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்களாயின. ஆழ்வார்களிற் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம் பெயரைத் துறந்து, ஆழ்வார் திரு நகரியாகத் திகழ்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு, இன்று விருதுநகராக விளங்குகின்றது.

இக்காலத்தில் தோன்றும் புத்துர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன. சென்னையின் அருகே எழுந்துள்ள தியாகராய நகரமும், காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அண்மையில் அமைந் திருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றி யுள்ள கணபதி நகரமும் இதற்குச் சான்றாகும்.

புரம்

புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். தொண்டை நாட்டின் தலைநகரம் ஆதியில் கச்சி என்றும், காஞ்சி யென்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் புரம் என்பது காஞ்சியொடு சேர்ந்தமையால் அது காஞ்சிபுர