பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

1. இவ்வூர் சோமிதேவ சதுர்வேதி மங்கலம் என்றும் இடைக் காலத்தில் பெயர் பெற்றிருந்தது. 434 of 1906.

2. கூறை என்பது ஆடை ஆடை நெய்யப்பட்ட இடம் கூறை நாடு என்று பெயர் பெற்றது. இப்பழைய சொல் இப்பொழுது கூறைப் புடைவை என்று வழங்கும் தொடர் மொழியிலே காணப்படும்.

3. “குருகூர்ச் சடகோபன் சொல்” - திருவாய்மொழி: 11.

4. சென்னைக்கு அண்மையிலுள்ள பல்லாவரம், பல்லவபுரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகிறது. 56 of 1909. அங்குள்ள பழைய குகைக் கோயிலில் மகேந்திரப் பல்லவனது விருதுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

5. ஜெயங்கொண்ட சோழபுரம், திருச்சி நாட்டு உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது.

6. இப்பதிகம் திருவிசைப்பாவிலே சேர்க்கப்பட்டுள்ளது.

7. “ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்

கார்தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான்.”

-திருஞான சம்பந்தர்,திருமயிலாப்பூர்ப் பதிகம்,4.

8. ............... “நீளோதம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்"

திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி, 35.

9. History of Madras, C. S. Srinivasachariar, p. 190