பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

77

மாநகரத்தின் பழைய வடிவம் ஓர் அழகிய பாட்டிலே காட்டப்படுகின்றது.

“ஏரி யிரண்டும் சிறகா எயில்வயிறாக்
காருடைய பீலி கடிகாவாச் - சீரிய
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு”

என்பது அப்பாட்டு. ‘காஞ்சி நகரம் ஓர் அழகிய மயில் போன்றது. எயில் அம் மயிலின் உடல்; ஏரி அதன் சிறகு; அத்தியூர் அதன் வாய், அடர்ந்த காடு அதன் தோகை என்பது அப்பாட்டின் கருத்து. எனவே, காஞ்சிபுரம் ஒரு மயில் கோட்டையாக விளங்கிற்றென்பது நன்கு அறியப்படும்.

பண்டை நாளில் பாண்டி நாட்டில் எயில்கள் பல இருந்தன. பூதப் பாண்டியனுடைய சிறந்த நண்பனாகிய சிற்றரசன் ஒருவன் எயில் என்ற ஊரில் இருந்து ஆண்ட செய்தி ஒரு பழம் பாட்டால் தெரிகின்றது. மன்னெயில் ஆந்தை என்று பாண்டியன் அவனைக் குறித்தலால் நிலை பெற்ற கோட்டையாக அவனது எயில் விளங்கியிருத்தல் வேண்டும் என்று தோற்றுகின்றது.

பழங்காலத்தில் சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் என்னும் நகரம் விளங்கிற்று. அவ்வூரில் சோழ மன்னர்கள் அரசு வீற்றிருந்த செய்தியைச் சேக்கிழார் வாக்கால் அறியலாகும். அக்காலத்தில் அஃது அரண் அமைந்த சிறந்த நகரமாக இருந்ததென்பது சில அடையாளங்களால் அறியப்படும். பேரெயில் என்னும் பெயருடைய ஒரு கோட்டை அதன் அருகே இருந்தது. அக்