பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியும் படையும்

89

மண்ணியாற்றங்கரையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பல்லவன் படைக்கும்,பாண்டியன் சேனைக்கும் பெரும் போர் நிகழ்ந்தது.கங்க அரசன் வரகுண பாண்டியனாற் கொல்லப்பட்டான்.இங்ஙனம் வீரப் போர் புரிந்து வீழ்ந்த கங்கவாணனுக்குத் தமிழ் நாட்டார் நாட்டிய வீரக்கல்,இன்று திருப்புறம்பயத்தில் ஒரு கோவிலாக விளங்குகின்றது. அப்போரில் பல்லவன் வெற்றி பெற்றான்.ஆயினும்,அது பெயரளவில் அமைந்ததேயன்றிப் பயன் அளித்ததாகத் தோன்றவில்லை.பல்லவர் ஆட்சி நிலை குலைவதற்கும், சோழரது ஆட்சி மீண்டும் சோழ மண்டலத்தில் நிலை பெறுவதற்கும், காரணமாயிருந்த திருப்புறம்பயப் போர் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்ச்சியாகும்.அப்போரின் விளைவாகத் தஞ்சை மாநகரில் ஆதித்த சோழன் மணி முடி சூடி அரசாளும் பெருமை எய்தினான். அவன் வந்த பெரு மன்னர் தஞ்சைச் சோழர் என்று பெயர் பெற்றுத் தமிழ் நாட்டுக்கு ஏற்றமும் தோற்றமும் அளிப்பாராயினர்.

அடிக் குறிப்பு

1. “படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” - திருக்குறள்:
- இறைமாட்சி, 1

2. “அன்பிலானை அம்மானை அள்ளூறிய அன்பினால் நினைத்தார் அறிந்தார்களே
- திருநாவுக்கரசர், அன்பில் ஆலந்துறைப் பதிகம், 3.

3. சாசனங்களில் மயிலார்ப்பில் எனவும், மயிலாப்பில் எனவும்