பக்கம்:தமிழக ஆட்சி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

97



நாடு என்னும் பெருநிலப் பரப்பை ஆண்டு வந்தவன் நாடாள்வான் எனப்பட்டான். அவன், தன் கீழ்க் காவல்ர் பலரைத் தலையாரிகள் என்ற பெயரில் நியமித்து நாடு காவல் வேலையைப் பார்த்து வந்தான். முன் சொன்ன முறையில் வந்த நாடு காவல் வருமானம் அவனைச் சேர்ந்தது, அவன் அத்தொகையிலிருந்து தன் ஆட்களுக்குத் திங்கள் தோறும் பணமாகவோ, நெல்லாகவோ சம்பளம் கொடுத்து வந்தான்.

பெருநாடு பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுச் சிற்றரசர் பலர் கையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சிற்றரசரும் தத்தம் நாட்டைக்காவல் புரிந்தனர்; வருவாயில் ஒரு பகுதி பேரரசனுக்கும் ஒரு பகுதி தங்களுக்கும் ஒரு பகுதி தம் காவலுக்கு உட்பட்ட நாட்டு நலத்துக்கும் செலவழித்தனர். இங்ஙனம் செய்து வந்தவர்களே நாயக்கர் காலத்துப் பாளையக் காரர்கள். -

அடுத்தடுத்த இரண்டு நாட்டுத் தலைவர்கள் தம்முள் அமைதியின் பொருட்டு உடன்படிக்கை செய்து கொள் வதுண்டு. இதனுல் இரு நாடுகளிலும் அமைதியே நிலவி யிருக்கும்.

நகரத்தில் திருட்டோ கொள்ளேயோ நடப்பின், ஊர்க்காவலர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். ஒரு குறிப் பிட்ட இடத்தில் ஒருவன் கொள்ளே யடிக்கப்பட்டால், அந்த இடம் எத்த நாட்டைச் சேர்ந்ததோ, அந்த நாட்டுக் காவல் தலைவன் பொருளை இழந்தவனுக்குத் தண்டம் கொடுக்க வேண்டும் என்று விசய நகர வேந்தர்கள் கட்டளையிட்டி ருந்தனர். விசய நகரத்தில் மட்டும் 12,000 நகரக் காவலர் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் மாதம் 30 பணம் சம்பளம் கொடுக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. விசயநகர ஆட்சியில் காவல்காரர் என்ற பெயரில் ஊர்க் காவலர் இருந்தனர், பெரு நாட்டில் சிறப்புப் பகுதிகளில்எல்லைப்புறப் பகுதிகளில்- அரசாங்க_நிலைப்படைகள் வைக்கப் பட்டிருந்தன. அவர்கள் அப்பகுதிகளில் நாடுகாவற் பணியைச் செய்து வந்தனர்.” -

1, South Indian polity, pp. 244-247

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/104&oldid=573622" இலிருந்து மீள்விக்கப்பட்டது