பக்கம்:தமிழக ஆட்சி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. படை

போர்க்காரணங்கள்

(1) நாடு பிடிக்கும் வேட்கை போருக்கு ஒரு காரண மாகும்.

(2) ஒரு தமிழரசன் மற்ற இரு தமிழரசரை வென்று மூன்று முடிகளைத் தானே சூடிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலும் போருக்குரிய காரணமாகும்.

(3) ஒர் அரசன் மகளே மணமுடிக்க இயலாது ஏமாற்றம் அடைதல், அரசர்கள் அப்பெண்ணின் நாட்டின்மீது போர் தொடுத்தற்கு ஒரு காரணமாகும். மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகை இட்டதற்கு இது காரணமாகக் கூறப் பட்டது.

(4) தன் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்கள் கப்பங்கட்ட தவறியபோது அரசன் போர் புரியவேண்டிய நிலை எற்பட்டது. முதற் குலோத்துங்கன் கலிங்கத்தின் மீது படையெடுத்தது இதற்காகத்தான்.

(5) அரசர்கள் தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியைத் தம் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும் பல போர்கள் மூண்டன. கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகளுக்கு இடைப்பட்ட இடத்தைப் பற்றிச் சோழருக்கும்-சாளுக்கியருக்கும், விசய நகர அரசருக்கும்-பாமினி அாசர்களுக்கும் அடிக்கடி போர் கள் மூண்டன என்பது வரலாறு கண்ட உண்மையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/105&oldid=573623" இலிருந்து மீள்விக்கப்பட்டது