பக்கம்:தமிழக ஆட்சி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

99



蜘_16öL位jā母

“படைகுடி கூழ்அமைச்சு கட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’

என்னும் குறளில் படை முதற்கண் கூறப்பட்டிருத்தல், படையின் சிறப்பை நன்கு உணர்த்துவதாகும். இந்த உண் மையைத் தமிழரசர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். தொல் காப்பியம்-புறத்திணைஇயலில் படைகளைப் பற்றிய விவரங்களும், போர்களைப் பற்றிய விவரங்களும் நன்குவிளக்கப்பட்டுள்ளன. படை பல பிரிவுகளாகப் பிரிந்து, பல பெயர்களைப் பெற்றி ருந்தது. அது, அணி, உண்டை, ஒட்டு எனப்பல பெயர்கள் பெற்றது. முதல் வரிசைப் படைகள் ஆக்கம், தார் (கொடிப் படை), தூசி, கிரை என்றும், பின் வரிசை கூழை என்றும் பெயர்கள் பெற்றன. யானேப்படை, குதிரைப்படை, காலாட் படை என்று படை பல பிரிவுகள் பெற்றது.

தேர்

தேர் மிகச் சிறியது; வீரனும் பாகனும் இருக்கத்தக்க அளவில் செய்யப்பட்டது. தேரில் மர வேலைப்பாடு மிகுதி. பல நிறங்கள் பூசப்பட்டிருந்தன. தேரைக் குதிரைகள் இழுத்துச் சென்றன. சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட் சென்னி குதிரை பூட்டப் பெற்ற பொன் தேரின் மீது பொலி வோடு காணப்பட்டான் என்று பரணர் பாடியுள்ளார்.” ‘உருவப்பல் தேர்’ என்ற தொடர், அச்சோழனிடம் நன்கு அமைக்கப்பெற்ற பல தேர்கள் இருந்தன என்பதைத் தெரி விக்கிறது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திரு மாவளவன், காற்று இயங்கிளுற் போலும் தாவுதல் உடைத்தாகிய கதியை உடைய குதிரையோடு கொடி அசையும் உச்சியை உடைய தேரை உடையவன். புற நானூற்றில் மட்டும் ஏறத்தாழ 25 செய்யுட்களில் தேர்

1. புறம், செ. 4 2. புறம் செ. 197

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/106&oldid=573624" இலிருந்து மீள்விக்கப்பட்டது