பக்கம்:தமிழக ஆட்சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

107


°.

வழக்கம்; அரசியல் தூதுவரைக் கொண்டும் ஒற்றரைக் கொண்டும் பகைவருடைய படைவன்மையை அறிவது. வழக்கம்: படையெடுக்குமுன்பு, “கீழ்ப்படியுங்கள்; இன்றேல், உங்கள் நாடு அழியும்,’ என்று பகைவருக்கு எச்சரிக்கை விடுதல் மரபு.

சேரன் செங்குட்டுவன் தன் படைகளுடன் இமயமலை சென்றான். - கரிகாலன் இமயமலை சென்றான் என்பவற்றை நோக்க, சங்ககாலத்தில் இந்தியாவில் பெருவழிகள் (Highways) இருந்தன என்பது தெரிகின்றது. தமிழ் நாட்டிலிருந்து வட நாட்டிற்குச் செல்ல அந்திர (வடுக) நாட்டிற்கு மேற்கே பெருவழி ஒன்று இருந்தது. அது வழிவழி மேற்கு என்று சொல்லப்பட்டது. கடப்பை, கர்நூல், அனந்தபூர் மாவட். டங்கள் அடங்கிய நிலப்பகுதிக்குக் கிழக்கே இவ்வடுக வழி மேற்கு அமைந்திருந்தது. அந்நிலப் பகுதியைப் பாணர்(Banas) ஆண்டு வந்தனர். கி. பி. 3-ஆம் நூற்றாண்டில் மயூரசர்மன் என்ற கதம்பர் குல முதல்வன் நாடு பிடிக்கத் தொடங்கிய பின்பு பாண அரசர்கள் வட ஆர்க்காடு மாவட்டத்திற் குடி. யேறினர். இப்பெருவழி சங்க காலத்திலேயே இருந்தது. என்பதற்கு இச்செய்தியே ஏற்ற சான்றாகும்.

பிற்காலச் சோழர் காலத்தில் கங்கை கொண்ட சோழனது படை கங்கை வரையில் சென்று மீண்டது. முதற் குலோத்துங்கன் படை கலிங்கம் வரையில் சென்று. மீண்டது. சோழர் படைகள் துங்கபத்திரை ஆற்றுக்கு அப்பாலும் சென்று போரிட்டன என்ற செய்திகளை நோக்க, பிற்காலச் சோழர் காலத்திலும் நாட்டில் பெருவழிகள் இருந்தன என்பது தேற்றம். -

ஒரு நாட்டின்மீது படைவீரர் செல்லும் பொழுது அவர் களோடு சமையற்காரர், சலவைத் தொழிலாளிகள்” தண்ணீர் தருபவர், இரும்புக் கொல்லர், பணி மக்கள், பணிப்.

1. EpigraPhia Indica, xi, p. 231; S I. I. m р, 90.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/114&oldid=573632" இலிருந்து மீள்விக்கப்பட்டது