பக்கம்:தமிழக ஆட்சி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழக ஆட்சி



SAAAAAA SAAAAASA SAASAASSAAAASSSSLLSS

வாணிகம், பண்பாடு ஆகியவற்றில் தொடர்பு கொண்டிருந் தது. மெளரியர் காலத்தில் வடநாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

அரசர்கள் தங்கள் அண்மை நாட்டு அரசர்களே: பெரும்பாலும் ஐயக்கண் கொண்டே பார்த்து வத் தனர். ஒருவரை ஒருவர் நம்புவதில்லை. அதல்ை எல்லேப் புறங்களே எப்பொழுதும் வீரர்கள் காவல் காத்து வந்தனர். மண்ணுசையே பெரும்பாலான போர்களுக்கு அடிப்படைக் காரணம். சேர, சோழ, பாண்டியர் ஒரே மொழி பேசி, ஒரே நாகரிகத்தில் வளர்ந்தவர். ஆயினும், அவருள் ஒற்றுமை இல்லை; சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு. மாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தனர். அப்பொழுது அவர்களேக் கண்டு மகிழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர்.

‘ஏதில் மக்கள் பொதுமொழி கொள்ளா(து)

இன்றே போல்கதும் புணர்ச்சி’

என்று வாயார வாழ்த்தினர்.”

சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியல் காணப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்த பொழுது ஒளவையார், ‘நீங்கள் விண்மீன்களைப் போலப் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்வீர்களாக!’ என்று உளமார வாழ்த்தினர்.”

ஒற்றர்

ஆட்சி முறையில் சிறந்த உறுப்பாகவும் படை அமைப் பின் சிறந்த உறுப்பாகவும் ஒற்று எண்ணப்பட்டது. அரசாங்க அலுவல் துறைகளில் ஒற்றுத்துறை ஒன்று. ஒற்றர் இலக் கணம் திருக்குறளில் கீழ்வருமாறு நன்கு கூறப்பட்டுள்ளது:

1. புறநானூறு, செ. 58. - 2. செ. 367.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/125&oldid=573643" இலிருந்து மீள்விக்கப்பட்டது