பக்கம்:தமிழக ஆட்சி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டல ஆட்சி

127



வழங்கப்பட்டன. உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன் என்பன குலோத்துங்க சோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது கலிங்கத்துப் பரணியால் அறியப்படும் செய்தி யாகும். -

ஒவ்வொரு வளநாடும் பல காடுகளாகப் பிரிக்கப்பட் டிருந்தது. ஒவ்வொரு நாடும் பல ஊர்களைப் பெற்றிருந்தது. சில ஊர்கள் தனியூர் எனப்பட்டன. எனவே, அது இன்றைய சென்னை நகரத்தைப் போலத் தனி ஆட்சி பெற்றதாக இருந் திருக்கலாம். கல்வெட்டில் மண்டலம்-வளநாடு-நாடு-ஊர் என்பவை முறையே குறிக்கப்படுதல் மரபு. ‘சயங்கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ,வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர் நாட்டுக் குன்றத்தார்’ என வரும் (வளநாடு கோட்டம்), ‘சோழ மண்டலத்து அருமொழி தேவ வளநாட்டுச் சேற்றுார்க் கூற்றத்துக் கண்டியூர். ‘சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் காட்டுப் பழையாறு’ என வரும். -

மண்டல அமைப்பு

சங்க காலத்தில் தமிழகம் சேர சோழ பாண்டிய நாடு களைச் சிறப்பு நாடுகளாகப் பெற்றிருந்தது. சேர சோழ பாண்டியரே முடியுடை மூவேந்தர், இந்த மூன்று நாடுகளின் எல்லைகளிலும் நாட்டு உட்பகுதிகளிலும் சிற்றரசர் சிலர் இருந்து வந்தனர். அவர்கள் தத்தம் சிறு நாடுகளுக்கு அண்மையிலிருந்த முடி மன்னனுக்கு அடங்கியும் அடங்கா மலும் இருந்தனர். -

V. S. பன்டாரத்தார். முதற்குலோத்துங்கன், - - - - பக்.98

95 of 1920 S. I. I. IV. 529

2.

3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/134&oldid=573652" இலிருந்து மீள்விக்கப்பட்டது