பக்கம்:தமிழக ஆட்சி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தமிழக ஆட்சி



கவும் மன்றங்களைப் பயன்படுத்தினர் என்பது இதனுல் பெறப் படுகின்றதன்றோ?

சிற்றுார் மன்றங்கள் மேலே சொல்லப் பெற்றவாறு ஊரார் வழக்குகளைத் தீர்க்கவும், தண்டனை விதிக்கவும், வளர் நிலங்கள் வாங்கவும் அல்லது விற்கவும், ஊர்ப் பொதுவான விழாக்களையும் கொண்டாட்டங்களையும் க.க்கவும் பயன் பட்டன என்று கொள்வதே பொருத்தமாகும்.’

ஊராட்சி மன்றங்கள்

தமிழகத்து ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய ஆட்சி மன்றம் இருந்தது. ஆட்சி மன்ற உறுப்பினர் அார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்காளர் ஊரின் தன் பகுதிக் குரிய சார்பாளர்களின் (பிரதிநிதிகளின்) பெயர்களே எழுகிக் குடத்தில் போடுவர். அக்குடத்தின் மேல் அரசாங்க இலச்சினை வைக்கப்படும். அதிகாரிகள் அம்முத்திரையை நீக்கி: ஒவ்வொரு ஒலையாகப் படிப்பர். இதனே,

கயிறுபிணிக் குழிசி ஓலே கொண்மார்

பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்கள்’

என்னும் அகநானுாற்றுப் பாடலால் அறியலாம். இங்கணம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஊராட்சியைக் கவனித்தனர். பல்லவர் காலத்திலும் பிற்காலச்சோழர் காலத்திலும் இத்தேர்தல் முறையே தொடர்ந்து வந்தது என்ப தைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. ஊராட் சி. மன்ற உறுப்பினர் கல்வி கேள்விகளில் சிறந்திருந்தனர்.”

1. TG. A. N. Sastri Studies in chola History and. - - Administration, p. 76.

2. செ. 77 - 3. புறநானூறு, செ. 225.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/139&oldid=573657" இலிருந்து மீள்விக்கப்பட்டது