பக்கம்:தமிழக ஆட்சி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தமிழக ஆட்சி




---------- --- 3-----

கொள்ளாதவர்; தூய வாழ்க்கை நடத்துபவர்; பூணுரல் அணிபவர்; உருவ வழிபாடு செய்பவர்; சகுனம் பார்ப் பவர்,’’’

மணிக்கிராமம்

மணிக்கிராமம் என்பது ஒரு வணிகர் சங்கத்தின் பெயர். இச்சங்கம் தென்னிந்தியா முழுதும் பல கிளேகஃாப் பெற்றி ருந்தது; சையாம் போன்ற வெளிநாடுகளிலும் பரவியிருந் தது. இதன் உறுப்பினர் பல்வேறு பொருள்களை விற்று வந்தனர். இச்சங்கத்தின் தலைவன் பல்லக்கில் செல்லுதல் போன்ற பல உரிமைகள் அரசல்ை வழங்கப் பெற்றவன். இஃது உள்நாட்டு வாணிகத்தையும் வெளிநாட்டு வாணிகத் தையும் சிறந்த முறையில் நடத்தி அரசாங்கத்திற்கு வருவாய். தேடித் தந்தது என்று சொல்லலாம்.

நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்

ஐய ஒளே'(ஐஹொளே) அல்லது கான தேசிய திசையாயிரத்து. ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர் சங்கம் தக்கணத்திலும் தமிழகத்திலும் பல கிளைகளோடு பணியாற்றி வந்தது. இது வீர பளஞ்ச மதத்தைப் பாதுகாத்து வந்தது. இதன் உறுப் பினர் ஐம்பொழில் பரமேசுவரி எனப்பட்ட ஜயபொழில் நாச்சியார் என்ற அம்மனே வணங்கி வந்தனர். அவருள். ஆயிரம் மாவட்டத்தார். பதினெண் பூமியார், முப்பத் திரண்டு வளர்புரத்தார், பதினென் பட்டினத்தார், கடி கைத்த வளத்தார் (64 வணிக அவையார்) எனப்பல.

1. F. N. of S. I. Pp. 176–177

இத்தகைய வணிகர் வருணனையைப் பட்டினப்பாலே யிலும் காணலாம்

2. E. I. IV. pp. 290-295

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/151&oldid=573669" இலிருந்து மீள்விக்கப்பட்டது