பக்கம்:தமிழக ஆட்சி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ஆட்சி

149



தனர். சில கோவில்களின் ஆட்சி ஊரவை, கோவில் ஆட்சிக் குழு, ருத்ரமாகேசுவரர் ஆகிய மூவரிடமும் இருந்தது. சில பெரிய கோவில்கள் தனிப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை யில் இருந்தன. அவர்கள் ஊரவையார்க்குக் கட்டுப்பட் டிருந்தனர்.” வேறு சில பெரிய கோவில்களில் இருந்த அதிகாரிகள், கோவில் ஆட்சிக்குழுவினர், ஊரவையார் சேர்ந்து இவருடன் கோவில் காரியங்களைக் கவனித்தனர்.* கோவில் ஆட்சி ஒரு குழுவினரிடம் அல்லது ஊரவையாரிடம் இருந்தாற் போலவே, கோவிலிலுள்ள நடுக்கோவில் (சிறப் புடைக்கோவில்) ஒருகுழுவினர் ஆட்சியில் இருத்தலும் உண்டு. அக்குழுவினர் கோவிற் பணத்திலிருந்து கடன் தருவர்: கடன் பெறுவர்; கோவிற் பணிகளைக் கவனிப்பர். கோவிலைப் பற்றிய மிக முக்கியமான செய்திகள் அரசன் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுதலும் உண்டு. கோவிலில் இருந்த பொக்கிஷசாலை ‘ழரீபண்டாரம்’ எனப்பட்டது. அதுபற்றிய கணக்குப்புத்தகம் ரீபண்டாரப் பொத்தகம் எனப்பட்டது.” சிவன் கோவில் பண்டார அதிகாரிகள் சிவபண்டாரிகள் எனப்பட்டனர். நடுகோவில் ஆட்சி போலவே முழுக் கோவில் ஆட்சி நடத்துவோரும் இருந்தனர். அவர்கள் கோவில் நிலங்களை விற்கவும், நிலங்களை வாங்கவும் உரிமை பெற்றிருந்தனர். கோவிலுக்கு அவரவர் செய்த தானப்

47 of 1920, 100 of 1906.

152, 210 of 1929 - 100 of 1929, 605 of 1920, 210 of 1921, 21 of 1922,

271 of 1927.

152, 154, of 1895, , , A. R. E, 1922, p. 111 201, 206 of 1919 327 of 1921. * S. I. I. I. 146 A. R. E. 1922. p. 177

+

i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/156&oldid=573674" இலிருந்து மீள்விக்கப்பட்டது