பக்கம்:தமிழக ஆட்சி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தமிழக ஆட்சி


,

பத்திரங்கள் (மூல ஓலைகள்) பூ பண்டாரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன; அதே சமயத்தில் அவை கோவிற் சுவரிலும் வெட்டுவிக்கப்பட்டன. கோவிலச் சேர்ந்த தேவ. ரடியார் முதலிய மக்கட்கும் பசுக்கள் முதலிய கால்நடை கட்கும் சூலப்பொறி பொறிக்கப்பட்டிருந்தது.”

கோவில் நிலங்களைப் பயிரிடும் உரிமை பலருக்கு வழங்கப்பட்டது. கோவிலில் விடப்பட்ட ஆடுகள் இடை பராலோ பிறராலோ ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கோவிலுக்குக் குறிப்பிட்ட அளவு நெய் அல்லது எண்ணெய் அளப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இத்தகைய ஒப்பந்தங்களில் உண்டாகும் குறைகளைக் கோவில் ஆட்சியாளர் கூடி முடிவு: செய்தனர். -

சிவன் கோவில்களில் திருப்பதிகம் ஒதவும், பெருமாள் கோவில்களில் திருவாய்மொழி ஒதவும் நிலதானம் விடப் பட்டது. இவ்வாறே வேத மந்திரங்களே ஒலிக்கவும் இதிகாச புராணங்களைப் படித்து விளக்கவும் நிலதானம் செய்யப்பட்டது.” -

சில கோவில்களில் வேதங்கள், சாத்திரங்கள், வடமொழி’ இலக்கணம் இவற்றைக் கற்பிக்கக் கல்லூரிகள் இருந்தன. அவற்றில் படித்த மாணவர்க்கு உண்டி, உடை, உறையுள் ஆகிய மூன்றும் இலவசமாக அளிக்கப்பட்டன. திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் இத்தகைய கல்லூரி ஒன்று இருந்தது. அதனை அடுத்து ஒரு மருத்துவ மனையும் இருந்தது, அதனில் பதினைந்து படுக்கைகள் போடப்பட்டிருந்தன.”

பல கோவில்களில் நடன மண்டபங்கள் இருந்து நடனக் கலேயை வளர்த்தன; இசை அரங்குகள் இருந்து இசையை வளர்த்தன.” ஒவ்வொரு பெரிய கோவிலிலும் ஆடலையும்

1. 299, 326 of 1913 2. 543 of 1921 and 537 of 1922 3. 63 of 1897, 163 of 1909, 240 of 1910, 365, of 1912. 4. A. R. E. 1916, para 16 5. 65,253 of 1914

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/157&oldid=573675" இலிருந்து மீள்விக்கப்பட்டது