பக்கம்:தமிழக ஆட்சி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. அரசுரிமை

அரசு தோற்றம்

பண்டைக் காலத்தில் தமிழகம் குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் வாழ்ந்த மக்கள் பல காரணங்களால் பிற நில மக்களோடு போரிட வேண்டிய நிலைமை அடிக்கடி ஏற்பட்டுவந்தது. அதனல் அவ்வந் நிலத்து மக்கள் தம்முள் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனைத் தம் தலைவனுக எடுத்துக்கொண்டு, அவன் சொற்படி நடக்கலாயினர். இங்ஙனம் தோன்றிய தலைமையே நாளடைவில் அரசாக வளர்ந்தது என்று சொல்லலாம்.

குறிஞ்சி நிலத்தில் விளைச்சல் மிகுதியில்லை. பிற நிலத்தார் அங்கு எளிதில் வருதல் இயலாது; அங்ஙனம் வந்து எதனையும் எளிதில் கவர்ந்து செல்லவோ பொருள் இல்லை. பாலே நிலத்தில் நல்ல வளமும் இல்லை; அதனால் விளைச்சலும் இல்லை. நெய்தல் நில மக்கள் நாளும் மீன் பிடித்துப் பிழைப்பவர்கள்; எனவே, எவ்வித உடைமையும் இல்லாதவர்கள்; ஆதலால் இம்மூவகை நிலங்களின் உடைமைகள் பறி போகுமே என்ற கவலை அந்நில மக்களுக்கு இல்லை. அதனால் இம்மூன்று. இடங்களிலும் தலைமை தோன்றியிருக்கலாமே தவிர, உடைமையைப் பாதுகாக்க என்றும் நிலையான அரசு தேவைப்படவில்லை.

முல்லை நிலத்தில் பசும் புல்வெளிகள் மிகுதி; ஆடு மாடுகள் மிகுதி; அங்குள்ள மக்களுக்கு, அவைதாம் செல்வம். அவை பிற நிலத்தாரால் கவரப்படின், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/23&oldid=510578" இலிருந்து மீள்விக்கப்பட்டது