பக்கம்:தமிழக ஆட்சி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசுரிமை

39



பெற்றிருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு மனைவியர் ஐந்நூற்றுவர் இருந்தனர் : நாட்டிலிருந்த அழகிகளே எல்லாம் மணந்து கொள்ளுதல் அரசர் வழக்கம் போலும் !’ என்று மார்க்கோபோலோ குறித் துள்ளார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி உறைவிடமும் பிற வசதிகளும் அளிக்கப்பட்டன. -

ஆடல்-பாடல் மகளிர்

அ ர ண் ம னே யி ல் அரசனே ஆடல் பாடல்களால் இன்புறுத்தவும், பிற பணிகளைச் செய்யவும் நூற்றுக் கணக்கான அழகிகள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த முறை பிற்காலச் சோழர் காலத்தில் விரிந்திருந்தது. அரண்மனையில் இருந்த ஆடல் பாடல் மகளிரையும், அழகிய பணிப் பெண்களையும், அவர்கள் மிக நெருங்கி அரசனோடு பழகுவதையும் கண்ட மேட்ைடார், அத்துணை யரும் அவன் மனேவியரென்றே கருதிவிட்டனரோ, அல்லது உண்மையிலேயே நூற்றுக்கணக்கான மனேவியர் இருந் தனரோ, உண்மை தெரியவில்லை.

அரண்மனையுள் இருந்த ஆடல் பாடல் மகளிர் ஆடினர்பாடினர் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிய லாம். அவர்களுடைய ஆடல் பாடல்களிலும் உடல் அழகி லும் மன்னர்கள் மதி மயங்குதலும் உண்டு என்பதையும் அதே நூல் தெரிவிக்கின்றது.”

மெய்காப்பாளர்

சிற்றரசர் பலர் அரசவையில் அரசனது மெய்காப்பாள ராக இருந்துவந்தனர். அவர்கள், திருமெய்காப்பார்’ என்று

1. சிலப்பதிகாரம், காதை 16, வரி. 131-133 2. K. A. N. Sastry, F. N. of S. I. P. 184.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/46&oldid=573564" இலிருந்து மீள்விக்கப்பட்டது