பக்கம்:தமிழக ஆட்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தமிழக ஆட்சி



பெயர் பெற்றனர். அவர்கள் அரசன் செல்லுமிடமெல்லாம்

. உடன் சென்றனர்; நெருங்கிப் பழகினர்; நாட்டில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். தமிழிலுள்ள உலா நூல் களைக் கொண்டும் இவ்வுண்மையை உணரலாம். ‘அரசன் இறந்து, அவன் உடலுக்கு எரியூட்டும் பொழுது இம் மெய் காப்பாளரும் அத்தீயைச் சுற்றிலும் தீயை உண்டாக்கித் தாமும் விழுந்து இறப்பது வழக்கம். அங்ஙனம் செய்வதால் அவர்கள் அடுத்த பிறவியிலும் தம் அரசனிடம் இருப்பர் என்பது அவர்தம் நம்பிக்கையாம்,’ என்று மார்க்கோ போலோ குறித்துள்ளார்.”

பொழுது போக்கு

அரசன் தம் ஒய்வு நேரங்களில் வேட்டையாடுதல் உண்டு. யானை, புலி, காட்டு எருமை முதலியவற்றை அரசன் வேட்டையாடுவான்; குடிமக்களுக்குத் துன்பம் செய்யும் கொடிய விலங்குகளை வேட்டையாடுவான். அவ்வாறு கொடிய விலங்குகளே வேட்டையாடுவது அரசனது கடமை என்று பெரிய புராணம் பேசுகிறது.

அரசன் போர்ப்பயிற்சி மிக்கவன்; ஆதலால் போரில் வல்ல வீரர்களோடு பழகுவான். போர்ப் பயிற்சிக் கூடம் போரவை’ எனப்பட்டது. பெருநற்கிள்ளி என்ற சோழன் இத்தகைய பேரவையில் சிறந்த பங்கு கொண்டவன்: ஆதலால் பேரவைக் கோப்பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றன்.”

பண்டைக்கால முதலே மல்லர்கள் தமிழகத்தில் இருந் தனர். அவர்கள் அரசன் முன்னிலையில் மற்போர் புரிவர். அரசனும் பிறரும் அதனைக் கண்டு களிப்பது வழக்கம்,

1. K.A. N. Sastry, F. N. ofs. I., P. p. 165. T

2. புறநானூறு, செ. 80-85.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/47&oldid=573565" இலிருந்து மீள்விக்கப்பட்டது