பக்கம்:தமிழக ஆட்சி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தமிழக ஆட்சி



ஆர்வம் கொண்டான். இராசசிம்ம பல்லவனும் சிவபெரு மான் ஆடிய நடன வகைகளில் மிக்க ஈடுபாடு கொண்டி ருந்தான்.

சோழர் காலத்தில் ஆண்டுதோறும் தஞ்சைப் பெரிய கோவிவில் இராசராசேசுவர நாடகம் நடைபெற்றது; இராசராச காடகமும் நடைபெற்றது. சோழ அரசர்கள் நடிகர்க்கு மானியம் ஈந்து நன்கு ஊக்கினர். அக்காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற நூலும் இருந்தது. இவற்றை நோக்க, சோழ மன்னருள் சிலரேனும் நாடகங்களேக் கண்டு களித்தனர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும்.

அலுவல் திட்டம்

அரசன் ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் நிகழ்ச்சி நிரலின்படி தன் வேலைகளை நடத்தி வந்தான். ஒவ்வொரு பகுதியும் நான்குமணி வீதம் ஒரு பகல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதற் பகுதி அறத்தின் வழிக் கழிக்கப் பட்டது; இரண்டாம் பகுதி ஆட்சி வேலைகளுக்காகச் செல விடப்பட்டது; மூன்றாம் பகுதி புலவர்களேச் சந்திக்கவும் அவர் களுக்குப் பரிசுகள் வழங்கவும் கழிக்கப்பட்டது. இரவில் ஒரு பகுதி, மறுநாள் நடைபெற வேண்டும் அரசியல் வேலைகளே நினைப்பதில் கழியும். ஒரு பகுதி ஆடல் பாடல்களிற் கழிய லாம்; ஒரு பகுதி உறக்கத்தில் கழியலாம். ஆல்ை பகலைப் போலவே இரவிலும் ஒவ்வொரு பகுதியும் நான்கு மணி நேரம் என்று கொள்ளுதல் டொருந்தாது. பொற்கைப் பாண்டியன் போன்ற தமிழரசர் இரவில் ககர் வலம் வருதல் வழக்கம், குடிகளின் குறைகளை அவர்தம் பேச்சால் அறிந்து அவற்றை நீக்கவும், குடிகளது வாழ்க்கை முறைகளை

1. 301 of 1907, 190 of 1907, 40 of 1906.

2. புறநானூறு, செ. 69. 3. டிெ, செ. 366.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/49&oldid=573567" இலிருந்து மீள்விக்கப்பட்டது