பக்கம்:தமிழக ஆட்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தமிழக ஆட்சி



ளைன. மாசனம், புரோகிதர், மருத்துவர், கணியர், அமைச்சர், என்பவர் ஐம்பெரும் குழுவினர் என்று சிலப்பதி “ கார , அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். இவருள் மாசனம் என்பது குடி மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் குறிப்பது. இவர்கள் குடிகளின் நலன் களையும் தேவைகளையும் அரசனிடம் எடுத்துக் கூறிப் பாதுகாக்கப் பயன்பட்டனர்; நாட்டில் சமயத் தொடர் பான செயல்களைப் புரோகிதர் கவனித்தனர். இவர்களைச் சமயப் பிரதிநிதிகள் என்றும் கூறலாம். மருத்துவர் நாட்டுச் சுகாதாரத்தைக் கவனித்து வந்தனர். கணியர் நாட்டில் நடைபெற வேண்டிய நல்ல செயல்களைத் தொடங்கு. தற்குரிய நாளேயும் நேரத்தையும் குறிக்கவும், வருவது உரைக்கவும் பயன் பட்டனர், நாட்டின் வருவாயையும் அரசாங்கச் செலவையும் நீதி முறையையும் அமைச்சர் கவனித்தார். இவ்வொவ்வொரு குழுவினரும் தனித் தனியே தலைநகரத்தில் கூடித் தம் கடமைகளைச் செய்து வந்தனர் என்று கருதலாம்.” -

சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த அடியார்க்கு, நல்லார் (1) அமைச்சர், (2) புரோகிதர், (3) படைத்தலைவர், (4) தூதுவர், (5) சாரணர் ஆகிய ஐவர் குழுக்களே ஐம்பெரும் குழுக்கள் என்று கூறியுள்ளார்.

“அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும்’ என்பது: இளங்கோவடிகள் வாக்கு. இதல்ை இவ்வைம்பெருங் குழுவினர் அரசுத் தொடர்புடையவர் - அரசனேடு இருப் பவர் என்பது பெறப்படும். துரதுவர் என்பவர் பல. நாடுகளுக்குச் சென்று தங்கி அரசியல் தூது சொல்வர். சாரணர் என்பவர் ஒற்றர். -

காதை 5, வரி 157 உரை. திராவிட இந்தியா, பக். 248. காதை 5, வரி 157 உரை. காதை 3, வரி 126,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/55&oldid=573573" இலிருந்து மீள்விக்கப்பட்டது