பக்கம்:தமிழக ஆட்சி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவு

67



ஏனைய வரிகள் பணமாகவே வசூலிக்கப்பட்டன. சில இடங்களில் நிலவரியும் பணமாகவே வசூலிக்கப்பட்டது.

வரி வாங்கும் முறைகள்

குடிகளிடம் வரிகளே வசூலிக்க ஏறத்தாழ நான்கு முறை கள் கையாளப்பட்டன: (1) அரசாங்கம் ஓர் இலாகாவையே அமைத்து அரசாங்க அலுவலரைக் கொண்டு நேரே வரியை வசூலித்தல்; (2) அரசாங்கத்திற்கும் குடிகளுக்கும் இடையில் ஒரு குழுவினர் இருந்து வரிகளே வசூலித்தல்; (3) குறிப்பிட்ட நிலப்பகுதியின் வருவாயை ஒருவரிடம் ஒப்படைத்து, அதன் ஒரு பகுதியை அரசாங்கத்திடம் ஆண்டுதோறும் கொடுக்கச் செய்தல்;(4) ஒரு நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ் வொரு பகுதியையும் ஒரு தலைவனிடம் ஒப்படைத்தல்; அத் தலைவன் ஆண்டுதோறும் கு றி ப் பி ட் ட தொகையை அரசனுக்குச் செலுத்துவதோடு போர்க்காலத்தில் படை உதவியும் செய்வதாக ஒப்புக்கொண்டு நடத்தல்.)

(1) அரசனுக்குரிய நிலங்களுள்ள கிராமங்களில் அக் கிராமத் தலைவர்கள் உழவர்களிடம் வரி வசூலித்து அரசாங் கத்திற்கு அனுப்புவர். சில கிராம நிலங்கள் உழவரால் விளைக்கப்பட்டன; கிராமத் தலைவர்களால் வரி வசூலிக்கப் பட்டது.

(2) ஊரவை அல்லது சபை இருந்த கிராமங்களில் அந்த அவையினர் அல்லது சபையினர் சட்டப்படி வரிகளை வசூலித்து அரசாங்கத்திற்குச் செலுத்தி வந்தனர். -

(3) குத்தகை, கட்டுக் குத்தகை, சித்தாயம் (சிற்றயம்?) என்ற முறையில் சில கிராமங்கள் சிலரிடம் ஒப்படைக்கப் பட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் பெற்று வந்தது.

1. S.I. polity, p. 177.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/74&oldid=573592" இலிருந்து மீள்விக்கப்பட்டது