பக்கம்:தமிழக ஆட்சி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவு

69



வரித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் வரும் வட்டிப்பணம் எதிர் காலத்தில் வரிக்கு ஈடுசெய்ய முடியும். இந்த முறையால் . அரசாங்கமோ ஊரவையோ வரியை இழக்கவில்லை என்பது இங்கு அறியத்தகும். சில பகுதிகளில் இவ்வாறு அறநிலையங் களுக்கு விடப்படும் நிலங்களுக்குரிய வரியை ஈடுசெய்ய, அந்த ஊரிலுள்ள மற்ற நிலங்களுக்கு உயர்ந்த வரி விதிப்பதும் உண்டு.”

நாட்டின் சில பகுதிகளில் தை மாதத்தில் வரி வசூலிக்கப் பட்டது. பெற்றுக்கொண்ட வரிக்கு இரசிது கொடுக்கப் பட்டது. வரியில் ஒரு பகுதி கட்டப்பட்டதுடன், அந்த ஆண்டுக்குரிய எச்சம் குறிக்கப்பட்டு, அதனைப் பெறுகிற உரிமையையும் எழுத்து வடிவில் பெற்றுக்கொண்டு, அவ் வாறே அத்தொகையை வசூலிப்பது அதிகாரிகள் பொறுப் பாக இருந்து வந்தது. சில பகுதிகளில் ஆண்டுக்கு மூன்று முறை வரி வசூலிக்கப்பட்டது. விசயநகர ஆட்சியில் ஆண்டு தோறும் நவராத்திரி காலத்தில் வரி வசூலிக்கப்பட்டது.”

வரிச் சுமை

“ஒரு மாவிற்குக் குறைந்த அளவுள்ள நிலமாயினும் அதன்கண் விளைந்த அரிசியைக் கவளமாக்கி யானைக்குத் தருவ தாயின், அவ்வரிசி அதற்குப் பல நாட்கள் உணவாகும். மாவை விடப் பெரிய விளைநிலம் ஆயினும், அதன்கண் யானையைப் புகவிட்டால், அது உண்ணும் அளவைவிடச் சிந்தி நாசமாக்கும் அளவே மிகுதியாக இருக்கும். அது போலவே அறிவுடைய அரசன் குடிகளிடம் அளவோடு வரி வசூலித்தால், அவனது அரசாங்கப் பண்டாரம் பெருகும்: அவனும் பாராட்டப்படுவான். அரசன் அறிவற்றவயுைம், நன்னெறியிற் செல்லாத வரி வசூலிக்கும் அலுவலரை உடை

1. டிெ பக். 182. 2. டிெ பக். 185,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/76&oldid=573594" இலிருந்து மீள்விக்கப்பட்டது