பக்கம்:தமிழக ஆட்சி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழக ஆட்சி



யவனாகவும், குடிமக்கள்மீது பொறுப்பற்ற முறையில்

“வரிகளைச் சுமத்துபவனுகவும் இருந்தால், தானும் அநுபவி யாமல் நாட்டையும் பாழ்படுத்தியவன் ஆவான்,’ என்று பிசிராங்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு எடுத்துக் கூறினர்.”

“வேலொடு கின்றன் இடுஎன் றதுபோலும்

கோலொடு கின்றன் தொடர்பு”

என்ற குறட் கருத்து இங்கு நினைவு கூரத் தகும். ‘

பழங்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் கொடிய முறை யில் வரி வசூலிக்கப்பட்டது. மகேந்திர மங்கலத்து அவை யோர் சோழ அரசாங்கப் படையினரால் தண்ணிரில் அழுத்தப்பட்டனர்; கொடிய வெய்யிலில் நிறுத்தப்பட்டனர். பின்பு அவர்கள் தஞ்சாவூர் சென்று முதலாம் இராச ராசனிடம் முறையிட்டனர் என்று கல்வெட்டுக் கூறுகிறது.” தான் வரிப்பணம் பாக்கி இல்லை என்று சொன்னதற்காக ஒரு பெண்மணி துன்புறுத்தப்பட்டாள். அதனல் அவ ள் விடத்தை உட்கொண்டு இறந்தாள். அவளைக் கொடுமைப் படுத்திய வரி அதிகாரி, அக்குற்றத்திற்காக அவ்வூர்க் கோவிலில் நாள் தோறும் தன் செலவில் விளக்கு எரியத் தானம் செய்தான் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.”

சில சமயங்களில் அரசாங்கத்துக்கு வரி செலுத்த இயலாமல் குடிகள் நிலங்களை விற்றனர். புன்னை வாயில் என்ற ஊர் அவையினரிடம் முழுவரித் தொகையையும் வசூலிக்க முடியாமையால், வரி அதிகாரி அவர்களைச் சிறையிலிட்டான். அதன் மீது ஊரவையினர் கிராமத்தைச்

1. புறநானூறு, செ. 184. 2. 159 of 1895

3. 159 of 1895, 80 of 1906

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/77&oldid=573595" இலிருந்து மீள்விக்கப்பட்டது