பக்கம்:தமிழக ஆட்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவு

71



சேர்ந்த 80 வேலி நிலத்தை இருநூறு பழங்காசுகளுக்கு விற்று முழு வரியையும் செலுத்திவிட்டனர்.’

தாங்க முடியாத வரிச் சுமையினுல் சில சமயங்களில் குடி மக்கள் கொதிப்படைந்து எதிர்ப்புக் காட்டுவதும் உண்டு. முதற் குலோத்துங்கன் காலத்தில் பசுக்கள் மீதும் பெண் எருமைகள் மீதும் திடீரென்று வரி விதிக்கப்பட்டது. 18 மாவட்டங்களேச் சேர்ந்த வலங்கைச் சாதியினர் ஒன்று கூடினர்: “சோழர் ஆட்சியின் தொடக்க காலம் முதல் சோழ மண்டலத்து எழுபத்தெட்டு நாடுகளிலும் தொண்டை மண் டலத்தைச் சேர்ந்த நாற்பத்தெட்டாயிரம் பூமிகளிலும் பசுக் களுக்கும் பெண் எருமைகளுக்கும் வரி விதிக்கப்படவில்லே. ஆதலால் புதிய அதிகாரி விதித்த வரியைக் கொடுக்க இயலாது. மேலும், புஞ்சை விளைச்சலில் ஐந்தில் ஒரு பகுதியும் குளத்துப் பாய்ச்சல் விளைவில் மூன்றில் ஒரு பகுதியும் வரியாக அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்,’ என்று தீர்மானித்தார். மூன்றாம் இராசராசன் காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் அரசாங்சு அதிகாரி கள் பலர் அதிக வரிகளை வாங்கத் தொடங்கியதால், உழவர்கள் நல்ல நிலை ஏற்படும் வரை நிலங்களில் பயிர் வையாமல் நிறுத்திவிட்டனர். இதனே அறிந்த மன்னர்குடி அவையினரும் சுற்றியிருந்த ஐந்து நாடுகளின் பேரவையின ரும் ஒன்று கூடினர்; வழக்கமான வரிகளே மட்டுமே செலுத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். . .

சில சமயங்களில் வரிச்சுமையால் வலங்கை, இடங்கைச் சாதிகள் அரசாங்கத்தை அச்சுறுத்தின. விருத்தாசலப் பகுதியில் அரசாங்க அதிகாரிகளும் நிலக்கிழார்களும் குடி களைத் துன்புறுத்தினர். காணியாழ்வானும் பிராமணரும்

T.Tळ्ळकFTप्लाळ 2. 464 of 1911 3. S. I. I WI48, 50, 58.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/78&oldid=573596" இலிருந்து மீள்விக்கப்பட்டது