பக்கம்:தமிழக ஆட்சி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவு

75


போன் வீதம் (391 கண்ணிக்கும் 391 ஆயிரம் பொன்). பரிசளித்தான். இவ்வாறு வரையாது வழங்கிய அரசர் பலராவர்.

(4) ஆற்றுக்கு அணை போடுதல், குளம் எடுத்தல், கால்வாய் வெட்டுதல், சத்திரம் கட்டுதல், பூங்கா அமைத்தல் என்னும் பொதுப்பணிகளுக்கு அரசாங்க வரியே பயன்படுத் தப்பட்டது.

(5) கட்டடக்கலே, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, வார்ப்புக்கலை முதலியவற்றை ஆதரிக்கவும் அரசாங்க வருவாய் செலவிடப்பட்டது.

(6) அரசாங்க வருவாயில் குறிப்பிடத் தக்க அளவு: அரண்மனை அலங்காரத்திற்கும், அரசனுடைய உடை குடி, அந்தப்புர, கேளிக்கை இவற்றிற்காகவும் செலவிடப் பட்டது.

(7) ஆண்டுதோறும் வருவாயின் ஒரு பகுதி எதிர்பாரா நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. இங்ஙனம். ஆண்டுதோறும் ஒதுக்கி வைக்கப்படும் பணம் பெரிய அளவில் அரசாங்கப் பண்டாரத்தில் சேர்த்து வைக்கப். பட்டது. “

1. சங்கரசோழன் உலா, கண்ணி 25-26. 2. S. I. Polity, pp. 195—196.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/82&oldid=573600" இலிருந்து மீள்விக்கப்பட்டது