பக்கம்:தமிழக ஆட்சி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தமிழக ஆட்சி



என்று இசைவு (ஒப்பந்தம்) எழுதிக்கொடுத்திருந்தார். அதைத் திருவெண்ணெய் நல்லூர்ப்பிச்சன் கொண்டுவந்து, சுந்தரர் தமக்கு அடிமை என்று சொன்னர். அப்பொழுது அவ்வூர்ச் சபையினர் படித்துப் பார்த்தனர்; ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்பவற்றை ஆராய்ந்தனர்; ஓலையில் இருந்த கையெழுத்தைத் தம் அரண்தரு காப்பில் இருந்த மூல ஒலக் கையெழுத்தோடு ஒப்பிட்டனர்; பின்னரே இசைவு வழக்கில் முடிவு கூறினர். இச்செய்தி தடுத்தாட்கொண்ட புராணத்திற் காணப்படுகிறது.”

ஒரு வழக்கில் நீதித்தீர்ப்புக்குத் துணை செய்வன மூன்று வகைப்பட்ட சாட்சியங்களாகும். அவை ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்பன. ஆட்சி என்பது, தொன்றுதொட்டு, அதாவது இத்தனை காலம் என்று அறியப்படாத காலமாய்ச், சான்றோராற் கையாளப் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கமாம். அதனேயே ஆன்றோர் ஆட்சி என்பர். ஆவணம் என்பது, ஒரு வழக்கைத் தீர்மானிக்க உதவும் சுவடி. ஒலை முதலிய எழுத்துச் சீட்டுக்கள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் செல்வது. இவை முறையே (Oral Evidence) surru,010sro G.D. grass syth, (Documentary Evidence) சுவடிக் கூறு என்றும் தற்கால ஆங்கில நீதி முறை யில் பேசப்பெறும். அயலார் தங்கள் காட்சி என்பதல்ை தாமே கண்டது சான்றாகுமன்றிப் பிறர் கண்டதைக்கேட்டுப் பேசுவது சான்றாகாது என்று ஒதுக்கப்பெற்றதும் தெரியலாம். Hearsay is not evidence orđsp @#5srair outh orgârgș. ஆவணம் என்பவை அந்நாளில் ஒலைகளில் எழுதப் பெற்றன. அவைகளில் எழுதிக்கொடுத்தோர் பெயரும், எ மு தி வாங்கிக்கொண்டோர் பெயரும், எழுதும் பொருளின் விவரமும் அடங்கும். இறுதியில் இதற்கு இவை என் எழுத்து என்று எழுதிக்கொடுத்தோர் கையெழுத்தும் இடப்பட்டிருக்கும். ஒப்பந்தங்களுக்கு இசைவு என்பது

1. தடுத்தாட்கொண்ட புராணம், செ. 59-63.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/91&oldid=573609" இலிருந்து மீள்விக்கப்பட்டது