பக்கம்:தமிழக ஆட்சி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தமிழக ஆட்சி



செய்யும் முறையைவிட மேற்பட்ட முறையில் விளங்குவது

காணலாம். இம் மு ைற க ள் தடுத்தாட்கொண்ட புராணத்திலே சுந்தரமூர்த்திகளைப் பரமசிவனர் வல் வழக்கிட்டு வெண்ணெய் நல்லூர்ச் சபையிலே தமது ஆள்

ஒலையைக் காட்டித் தம் பக்கம் தீர்ப்புப்பெற்று ஆட் கொண்டருளிய வரலாறுகளிலும் பிறவற்றாலும் நன்கு அறியக்கிடக்கின்றன. ஊர்கள்தோறும் உள்ள நீதி முறைச் சபைகளிலே தக்கோர் இருந்து செந்நெறியிலே நமர்-பிறர் என்ற எவ்வகைப் பேதமும், ஒருபாற் கோடிப் பாரபட்சம் செய்தலும் இல்லாமல், இருவகையும் ஒப்பநாடி நீதித் தீர்ப்புச் செய்து வந்தார்கள். அந்தச் சபைகளுக்குக் கரணத்தான் (குமாஸ்தா-clerk) ஒருவன் உண்டு. அவனே அந்தச் சபையார் ஏவலின்படி நீதி விசாரணைக் காரியங்களில் உதவி செய்வான். அவனே நீதி மன்றத்தில் சுவடி முதலிய வற்றைக் காவல் புரிபவன்.’

மாற வர் ம ன் சுந்தரபாண்டியதேவன் காலத்தில் குளத்துார் மக்களும், அவ்வூர்க் கோவில் அதிகாரிகளும்

ஒரு கட்சியாக இருந்தனர் ; விக்கிரமசோழ நாடாள்வான்

என்பவன் எதிர்க்கட்சியாளன். ஆற்று நீர் உரிமை பற்றி இவ்விருதிறத்தாருக்கும் பூசல் உண்டானது. இருதிறத்

தாரையும் சான்றோர் விசாரித்து, ஆற்றில் ஒரு குறிப்பிட்ட

பகுதியில் தண்ணிர் எடுக்கலாம் என்றும், மீன் பிடிக்கும் வரியில் ஒரு பாதி கோவிலுக்கும் மறுபாதி விக்கிரமசோழ ந'ா டா ள் வா னு க் கு ம் சேரவேண்டும் என்றும் முடிவு செய்தனர்.”

திருவதிகை திருவீரட்டானேசுவரர் கோவிலைச் சேர்ந்த தானத்தார், மாகேசுவரர் ஆகியோருக்கும் அதிராஜ மங்கலியபுரத்து நகரத்தார்க்கும் எல்லை பற்றிய வழக்கு

1. C. K. S. முதலியார், சோழர், பக். 66-68. 2. 380 of 1914,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/93&oldid=573611" இலிருந்து மீள்விக்கப்பட்டது