பக்கம்:தமிழக ஆட்சி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

89


.

ஏனைய வழக்குகளைப் போலவே கடுந் தண்டனைக்குரிய வழக்குகளும் ஊர் மன்றங்களிலும், நாட்டு மன்றங்களிலும் விசாரித்து முறை வழங்கப்பட்டன : தேவை ஏற்படின், அரசனும் அ ைம ச் ச னு ம் நேரில் விசாரித்து நீதி வழங்கினர்.

ஒருவன் வேட்டையாடும்போது குறிதவறி ஒரு வெள்ளாளனைக் கொன்று விட்டான். அவனை விசாரிக்க எழுபத்தொன்பது நாடுகளைச் சேர்ந்த த லே வர் க ள் கூடினர் : தன் குற்றத்திற்கு ஈடாக அவனது ஊர்க் கோவிலில் இரண்டு நந்தா விளக்குகள் எரிப்பதற்காக அறுபத்து நான்கு ஆடுகளைக் கோவிலுக்கு விடும்படி தீர்ப்புக் கூறினர்.”

ஒரு நாடாள்வான் விற்படையினரின் தலைவருள் ஒரு வனைக் குத்திக் கொன்றுவிட்டான். இரண்டாம் இராசேந்திர சோழன், அக்குற்றவாளி கோவிலில் ஒரு நந்தா விளக்கு வைக்க வேண்டும் என்று கிராம அதிகாரிகளுக்கு ஆணே போக்கினன்.”

ஒரு வெள்ளாளன், தவறுதலாக வேறொருவனேக் கொன்று விட்டான். அரசாங்க அதிகாரி அவ்வழக்கை விசாரித்தான். கோவில் பட்டர்கள், அவன் வேளாளனுக இருத்தலால் கொலைத் தண்டனை கூடாது என்றி கூறினர். அரசாங்க அதிகாரி அந்த முடிவை ஏற்றுக் கொண்டான்.”

ஒரு வணிகன் வைப்பாட்டி வைத்திருந்தான். மற் றொருவன் ஒர் இரவு அவளே கெடுக்க முனைந்தான். வணிகன் அங்ஙனம் வந்தவனைக் குத்திக் கொன்றான். இவ்வழக்கை

1, 67 of 1906 2. 227 of 1904

3. 200 of 1929; ஒரு குலத்துக்கு ஒரு நீதி இருந்தமை.

யைக் காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/96&oldid=573614" இலிருந்து மீள்விக்கப்பட்டது