பக்கம்:தமிழக ஆட்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தமிழக ஆட்சி



விசாரித்த பெரியவர்கள், வணிகனும், இறந்தவனது நெருங்கின உறவினனும் ஆக, இருவரும் சேர்ந்து உள்ளுர்ச் சிவன் கோவிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்கட்டும் என்று: முடிவு கூறினர்.” -

வேண்டுமென்றே நடைபெற்ற கொடிய குற்றங்களுக்குக் கடுந் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

ஐந்து பிராமண சகோதரர்களும் சில வெள்ளாளர்களும் தங்கள்:சாதித் தொழில்களை விட்டுக் கீழ் வகுப்பார் தொழிலே மேற்கொண்டனர். அவர்கள் கொடிய கருவிகளைக் கொண்டு பிராமணர்களைக் கொலை செய்தனர்; பிராமணப் பெண்களை இழிவு படுத்தினர்; கொள்ளை அடித்தனர்; கால் நடைகளைக் கைப்பற்றி விற்றனர். இக்கொடுமைகளை விக்கிரம சோழன் அதிகாரிகளுக்கு (இது நடந்த நாட்டு அதிகாரிகளுக்கு)த். தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அக்குற்றவாளிகளைப் பிடித்து அடித்தனர்: தண்டம் விதித்தனர்; அவர்கள் வீடுகளே அழித்தனர். இத்தண்டனைகளால் அவர்கள் திருந்தவில்லை. உடனே மக்கள் அந்த நாட்டை ஆண்ட பொத்தப்பி அரையர் என்பவரிடம் முறையிட்டனர். அவர் ஒரு படையை ஏவினர். குற்றவாளிகள் அப்படை வீரருள் சிலரைக் கொன்றனர்; அவர்களுடைய போர்க் கருவிகளையும் கைக்கொண்டனர். ஆயினும், படைவீரர், குற்றம்புரிந்த பிராமண சகோதரர் ஐவருள் இருவரைச் சிறைப்பிடித்து, அரசன் முன்னிலையில் கொண்டு சென்றனர். அவ்வமயம் மற்ற மூன்று சகோதரர் களும் காவலரைக் கொன்று குற்றவாளிகளை விடுவித்தனர். இதனை அறிந்த அரசன், கீழ்வகுப்பினரைத் தண்டித்தற்கு, உரிய விதிகளின்படி அக்குற்றவாளிகளைத் தண்டிக்கும்படி கட்டளையிட்டான். அத்துடன். அவர்களது வழிவழிச் சொத்து கோவிலுக்கும் அறநிலையங்களுக்கும் விற்கப்பட வேண்டும், விற்றுவரும் தொகையிலிருந்து அவர்கள் செய்த குற்றங்களுக்குரிய தண்டனைத் தொகையை எடுத்துக்

1. 77 of 1906

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/97&oldid=573615" இலிருந்து மீள்விக்கப்பட்டது