பக்கம்:தமிழக ஆட்சி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

91


.

கொள்ளவேண்டும், எஞ்சிய தொகையை அக்குற்றவாளிகள் பெயரில் கோவிலுக்குத் தானமாக அளித்துவிட வேண்டும்,’ என்று ஆணை பிறப்பித்தான்.”

இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் அறிவன யாவை ஊர் அவையார் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாதபோது, அரசாங்க அதிகாரிகளும் அரசனும் த லை யி ட் டு. வழக்கை முடிவு செய்வர் என்பது தெரிகிறது; மேலே கூறப்பெற்ற குற்றவாளிகள் பொது மக்களால் பிடிக்கப்பட் டனர் என்பதும், அவர்கள் கீழ் வகுப்பினர்க்குரிய தண்டனே விதிக்கப்பட்டனர் என்பதும் தெரிகின்றன.

அதிகாரி முன்னிலையில் குற்றவாளிகளே தம்முள் ஒரு முடிவுக்கு வருதலும் உண்டு. புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த தெற்குப் பகுதி மக்களுக்கும் வடக்குப் பகுதி” மக்களுக்கும் மாறுபாடு உண்டானது; அதல்ை பல கொலே கள் நிகழ்ந்தன. வடபகுதியினர் மிக்க அட்டுழியம் செய்” தனர். அதனல் அவர்கள் தங்கள் மக்களில் சிலரைத் தெற்குப் பகுதியினரிடம் ஒப்படைத்தனர்; கோவில் அதிகாரிகள் முன் னிலையில் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டனர், அதன்படி இருதிறத்தாரும் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கலாகாது, இதற்கு மாருக நடந்தால் இருதிறத்தாரும் கூடித்தீமை செய்” பவன் நிலங்களைக் கைப்பற்றிக் கோவிலுக்குத் தானமாக விடலாம், அங்ஙனம் தானமாக விடப்பட்ட நிலங்களுக்கு அந்தக் குற்றவாளியே வரி செலுத்த வேண்டும், இவற்றேடு” ஊரவைக்கும் அரசனுக்கும் அவன் தண்டம் செலுத்தவும் நேரலாம் என்று ஒப்பந்தம் செய்தனர்.”

அரசத் துரோகம் செய்தவர் சொத்து அரசாங்கத்தாரால் கைப்பற்றப்பட்டது. அத்துரோகிகள் சில சமயங்களில்

1. 315 of 1909; A. R. E. 1910, para 34. 2. Ins. of Pudukkottai State 683

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/98&oldid=573616" இலிருந்து மீள்விக்கப்பட்டது