பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 101

53. மொட்டைப் பக்கிரி தர்காவிற்கு

சிவகங்கை மன்னர் கொடை*

சிவகங்கையில் 'மொட்டைப் பக்கிரி' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இஸ்லாமிய ஞானி ஒருவர் இருந்தார். அவர் செய்த பலவிதமான அற்புதங்களை இன்றும் சிவகங்கை மக்கள் நினைவுகூர்கிறார்கள். இரவு தூங்கும்போது அவர் உடல் உறுப்புகள் வேறு வேறாகச் சிதறிக் கிடக்குமாம். காலையில் எழுந்து வருவாராம். அவருக்கு ஒரு தர்கா கட்டப்பட்டது. அதற்கு 'மொட்டைப் பக்கிரி தர்கா' என்றே பெயர். அதற்குச் சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதர் பெரிய உடையத்தேவர் பல கொடைகளை வழங்கி செப்பேடும் வெட்டித் தந்துள்ளார்.

  • சிவகங்கை வரலாற்றுக் கருத்தரங்குக் கட்டுரைகள்