பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

  • தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

இருநேமி யளவும் ஒருநேமி ஓங்க

சேரலர் பணிய.... மணியணி

மாட கூடப் பாண்டிமண் டலங்கொள்

தென்கீழ்க் கடல்படர் காய லந்துறை

கொற்கை முத்துடை வீரபாண்டியன் பட்டினத்துள்

வெண்டிரள் மணல்மேட்டு மேலெல்கை பவித்திர மாணிக்க நகர்க்குக் காவலர் ஐவருக் கொருவர்

திரிபுவனச் சக்கரவர்த்தி ஆணையாக கடற்கரைப் பள்ளி இறையிலியாகக் குடுக்கும்படிக்கு திருவுளத்தருளிய முத்துச் சலாபம் வாணிகச் சோனகர் குழுக்காய் நாட்டிப் படுத்து.... எல்கை காட்டியும்... வாறெல்லாம்... யாண்டு... விளங்குமுயர் வெள்ளிநாள்.... கல்லில் வெட்டுவித்தேன்.... த்துத்.... மாறென...ரா... ண்டனனே... தென்னர் பராக்கிரமனே.... யு.... ஒன்றே யாண்டு கொள்ளவுமாக.... துல்யம்... எழுத்து... ஸ்ரீ...

2) கற்புடையார் பள்ளிக் கல்வெட்டு

மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (1314-1362) காலக் கல்வெட்டு.அரசனின் 11ஆம் ஆட்சியாண்டில் பவித்திர மாணிக்கப் பட்டினத்து வியாபாரி வடவணிகன் என்பவன் சந்தியா தீப விளக்குவைக்க இரண்டு அச்சுக் கொடுத்தான்.'

கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கர வத்திகள் குலசேகர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஒன்பதாவதின் எதிர் இரண்டாவது பவித்திர மாணிக்க பட்டினத்து வியாபாரி வடவணிகன்... செய்வதாக சந்தி தீப விளக்குக்குப் பண்டாரத்துக்கு அச்சு இரண்டு இத்தர்மம் சந்திராதித்தவரை செல்வதாக...

3) இரட்டைக் குளம் பள்ளிவாசல் கல்வெட்டு

மேல் கல்வெட்டில் கண்ட குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சியாண்டில் சுல்தான், உய்யவந்தான் திருவனந்தன் ஆகியோர் கொடுத்த கொடை குறிக்கப்படுகிறது.

கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு பராண்டு பதினைந்தாவதுக்கு எதிராவது சுல்தான் உள்ளிட்டாரும் உய்யவந்தான் திருவனந்தன் இவ்வனைவோரும்...