பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

69-A. கிறித்தவ தேவாலயத்தில் அரபு மொழிக் கல்வெட்டு

ஆஸ்திரேலியாவிலிருந்து 1894ல் கிறித்தவ பணிக்காக இந்தியா வந்த மறைதிரு அந்தோணி வாட்சன் பிரப் 1894ல் கோவை வந்தார். 1897இல் ஈரோடு வந்தார். 1904ல் ஈரோடு நகர பரிபாலன சபைத் தலைவராக விளங்கினார்.

அவர் நினைவாக ஈரோடு மையப் பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயம் 'பிரப் நினைவு தேவாலயம்' என்ற பெயருடன் விளங்குகிறது. 1930ல் திட்டமிடப்பட்டு 1933ல் “இந்தோசரோனிக்” கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் முகப்பில் “கடவுள் ஒருவரே” என்று பொருள்படும் “யா குதா” என்ற சொற்றொடர் பெரிய அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.