பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

புலவர் செ. இராசு

145

75. மாபூஸ்கான் கொடுத்த கொடை*

ஆர்க்காடு நவாப் அசரத் கிபிலே நவாபு சாயபு மகம்மது அன்வர்த்திகான் மகன் மாபூஸ்கான். ஆர்க்காடு நவாபின் பிரதிநிதியாக மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நிர்வாகம் செய்து வந்தார்.

மாபூஸ்கானின் குரு அசரத் மியா இமாமு சாயபு. அவர் மகன் மாய சேகு அகமது அவர்கட்கு ஆண்டுதோறும் 78 ரேகை பொன் கொடுக்க வேண்டும் என்றும், அதனை மாதாமாதம் 6 பொன் 5 பணம் வீதம் கொடுக்கலாம் என்றும் எழுதிச் செப்பேடு ஒன்று கொடுத்தார் மாபூஸ்கான். கொடை 29.3.1745 அன்று வழங்கப்பட்டது.

இந்த 72 ரேகைப் பொன்னும் திருநெல்வேலி அரிப்புத்துறைக் குத்தகையிலிருந்து வழங்கவும் ஏற்பாடு செய்தார். இந்தச் செப்பேட்டை திருநெல்வேலி நாட்டுக் கணக்கு கந்தசாமி எழுதியுள்ளார். தமிழிலும், இந்துஸ்தானியிலும் உள்ள இந்தச் செப்பேடு திருவனந்தபுரத்தில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் உள்ளது. இந்தச் செப்பேட்டை அறிஞர் டி.ஏ. கோபிநாதராவ் பதிப்பித் துள்ளார்.

  • தமிழ்நாட்டுச் செப்பேடுகள் - இரண்டாம் தொகுதி. பக் 358. ச. கிருஷ்ணமூர்த்தி