பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

90. மகத்துவம் நடந்த சங்ககிரி பள்ளிவாசல்*

சங்ககிரியில் பலபட்டரை அல்லாக் கோயிலுக்கு அருகில் உத்தமியான ஒரு மஹமதிய சர்தார் மனைவி இறந்து போக. சமாதி செய்தார்கள். அதற்கு அழகிய கட்டிடம் உண்டு. பலர் அங்கு சென்று பாத்தியாக் கொடுத்து வணங்குதலுமுண்டு. முறை செய்து கொண்ட காரியம் சித்தியாகும்.

அத்துடன் ஏழைகளானவர்கள் எந்த மதத்தினரானாலும் அங்கு சென்று “நாளை கலியாணம் இன்ன இன்ன நகை வேண்டும்” என்று கேட்டால் “அப்படியே தருகிறேன் நாளை வா” என மறுமொழி கோயிலிலிருந்து பிறக்கும். அதிகாலையில் போனால் கேட்ட நகைகளெல்லாம் வாயிற்படிக் கதவருகில் வைக்கப்பட்டிருக்கும். வணங்கி எடுத்துக் கொண்டு வந்து கலியாணம் முடிந்தவுடன் போய், “பீபி” என்றால் “ஏன்” என்று கேட்கும்.

வாங்கிப் போன நகைகளை வைத்து வணங்கிப் போய் வருகிறேன் எனக்கூறிவிட்டு மறுபடியும் வணங்கி வருவார்கள். இப்படிப் பலகாலம் நடந்து வந்தது. யாரோ ஒருவர் வாங்கிப் போன நகைகளைக் கொடாது வைத்துக் கொண்டனர். அது முதல் திருமண வீட்டார் சென்று கூப்பிட்டால் கேட்பதில்லை. நகைகளும் கொடுப்பதில்லையாம். இது சுமார் 70 வருஷங்களுக்கு முன்னும் (சுமார் 1860 வரை) நடந்தது. பார்த்தவர்கள் இருக்கிறார்கள் என்று நேரில் விசாரித்து தி.அ. முத்துசாமிக் கோனார் 1934ல் எழுதியுள்ளார்.

  • 'கொங்குநாடு', தி.அ.முத்துசாமிக் கோனார். திருச்செங்கோடு. 1934,

பக் 79