பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 131

91. முல்லா சாஸ்திரம்*

கோயமுத்தூருக்குச் சில்லா துக்குடி சேவூரு தாலுக்கா நசுபா சேவூரிலேயிருக்கும் காஞ்சி சேகு மகம்மது சாயபு சேகுந்த சாயபு இவர்களால் சொல்லப்பட்ட கைமீது என்னவென்றால்

முல்லா சாஸ்திரம் என்று சொல்லப்பட்ட கிரந்தம். இதில் சொல்லப்பட்டது முசல்மான் சாதியாரை ஈசுவரனான அல்லா அவ ருடைய பாதாரவிந்தத்தை நினைத்துக் கொள்ளச் சொல்லும்படி யாகச் சொல்லப்பட்ட பொருள் சொல்லப்பட்டது வேதம். மேல் எழுதப்பட்டது வேதம்.

பகற்காலமே நமாசு

மத்தியானம் அஸர் ஹக்கி மகறிபு யிஷா

இப்படிக்கு அஞ்சுதரம் நாள் ஒன்றுக்கு நமாசு பண்ணுகிறது. இப்படிக்கு முசல்மான் சாதியிலே சகலமான ஜனங்களுக்கும் பண்ணப்பட்டது. சிறிது ஜனங்கள் அவாளாவாளுடைய கெரிபுனோலேயும் மடத்தனத்துனாலேயும் பண்ணுகிறது இல்லை. காசி தலமாயிருக்கப்பட்டவர்கள் மசூதிகளிலே நமாசு தப்பாமல் அஞ்சு தரம் நமாசு பண்ணிக் கொண்டு ராசாக்கள் சீறேயும் பிரார்த் திச்சுக் கொண்டு இருக்கிறது. இதுக்குத் தகவலாயிருக்கப்பட்டது பங்கு சலவாத நமாசு ரோஜா

பந்தகீ ஹல்லாகீ கறணறஹே யிதுக்கு தாத்பரியம்

  • தமிழ்நாடு கீழ்த்திசைச் சுவடி நூலகம். எண் டி.2951